tamilnadu

img

தனியார் கொள்முதல் நாட்டிற்கே ஆபத்து

புழு, பூச்சி தொடங்கி உயிர் உள்ள அனைத்து ஜீவராசிக ளுக்கும் ஏதோ ஒருவகையில் உணவு கிடைக்க வழிவகுக்கும் தொழில் விவ சாயம். வேறு எந்த தொழிலுக்கும் கிடைக்காத மாண்பு இது. விவசா யத்தை மேற்கொள்ளும் அத்தனை பேரும் நாட்டின் முதுகெலும்புகள் தான். ஆனால் அவர்களுக்குத்தான் எத்தனை தொந்தரவுகள். இயற்கை தான் அடிக்கடி தன் பங்குக்கு விளை யாடுகிறது என்றால், விவசாயத்தை மேம்படுத்தவும், விளை பொருட்க ளை பாதுகாக்கவும், நல்ல விலை கிடைக்க வைக்கவும் நடவடிக்கை எடுக்காமல் அரசுகளும் புறக்கணித் தால் அவர்கள் எங்கே செல்வார்கள்?.  இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும், உரம் மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று வழக்கம் போல் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நட வடிக்கையும் உழவே தலை என்ப தற்கு பதில் உழவர்களுக்கு தலை வலி கொடுக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளன.  தற்போது உண வுப்பொருட்களை விவசாயிகளிடம் இருந்து இனிமேல் தனியார் நிறுவனங் கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அரசின் முடிவால் அதிர்ந்து போய் நிற்கிறார்கள் விவசாயிகள். தமிழகத்தில் மட்டும் 2021-22 நிதியாண்டில் ஆகஸ்ட் வரை மொத்த  உற்பத்தி நெல் 1,22,22,463 டன். இதில் தமிழ்நாடு நுகர் பொருள்  வாணிபக்கழகம் மூலம் கொள்முதல் செய்த நெல் 42,55,135 டன். இது தமிழக விவசாயிகளின் மொத்த உற் பத்தியில் 35 சதவிகிதம் ஆகும்.  இதைத்தான் ஒன்றிய அரசு கொள் முதல் செய்ய அனுமதித்துள்ளது.  இந்த 42.50 லட்சம் டன் நெல்லுக்குத் தான் குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கும். மீதம் உள்ள 79.67 லட்சம் டன்  நெல் தனியாருக்குத்தான் விவ சாயிகள் விற்பனை செய்து இருப்பார் கள். விவசாயிகளிடம் தனியார் கொள்முதல் செய்தால், அவர்கள் வைத்தது தான் சட்டம். கேட்ட விலை க்கு விவசாயிகள் கொடுத்துவிட்டு வர வேண்டியதுதான்.

விவசாயிகளின் உற்பத்தி பொ ருட்கள் அத்தனையும் அரசே கொள் முதல் செய்வது இல்லை. அப்படிப் பட்ட வசதிகளும் உருவாக்கப்பட வில்லை. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கூட அந்த நடவடிக்கை தொடங்கப்பட வில்லை என்பது வேதனை.ஒவ்வொரு தாலுகா தோறும் தேவைப்படும் அளவுக்கு தானிய கிடங்குகள் ஏற் படுத்துவது முக்கியம்.  அரசு கொள்முதல் நிலையங்க ளை அதிகப்படுத்தி, விளை பொருட் களை நீண்ட காலம் பாதுகாக்க கூடிய கட்டமைப்புகளை அதிக எண்ணிக் கையில் உருவாக்குவதற்கு பதில் தனியார் வசம் விளைபொருட்கள் கொள்முதலை ஒப்படைத்தால் மிகவும் திறம்பட செய்வார்கள்; கொள்முதல் செலவும் குறையும் என்கிறது ஒன்றிய அரசு. அடுத்த ஆண்டு முதல் இந்த நடை முறையை - அமல்படுத்தவும் ஒவ் வொரு மாநில அரசுக்கும் அறி வுறுத்தி இருக்கிறது. அதோடு இனி மேல் உணவுப் பொருள் கொள்முத லில் 2 சதவீத செலவீன தொகையை  மட்டுமே ஒன்றிய அரசு அனுமதிக் கும் என்று அறிவித்து இருக்கிறது.  பரந்து விரிந்த நம் நாட்டில் கொள் முதல் செலவீனம் இடத்திற்கு இடம் வேறுபடும். சில மாநிலங்களில் 2 சத வீதம் இருக்கும். சில மாநிலங்களில் 8 சதவீதம் வரை இருக்கும். இனிமேல் 2 சதவீதம் தான் என்று கறார் காட்டி யிருக்கிறது ஒன்றிய அரசு. அந்த சுமை யும் இனிமேல் மாநில அரசுகள் தலை யில்தான் விழப்போகிறது. இதை அனுமதிக்கக் கூடாது.

- ஐ.வி.நாகராஜன்

;