tamilnadu

img

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்கள் சங்கம்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்கள் சங்கம் சார்பில் “வயலூர் அர்ச்சகர்கள் பணிநீக்கம் கருவறைத் தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா?” என்ற தலைப்பில் சென்னையில் சனிக்கிழமை (ஏப். 15) கருத்தரங்கம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சே.வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஐ மாநில துணைச்செயலாளர் நா.பெரியசாமி, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தந்தை பெரியார் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் விடுதலை அரசு, ஆ.சிங்கராயர் (தி.இ.த.பே), உமாபதி (திவிக), சி.ராஜூ (மக்கள் அதிகாரம்), மருதையன் (ம.உ.பா.மையம்) ஆகியோர் பேசினர். முன்னதாக சரவணன் வரவேற்றார். வா.ரங்கநாதன் நன்றி கூறினார்.