tamilnadu

75வது சுதந்திர தின நிறைவு விழா கொண்டாட்டம்

ஆந்திரா, பிப்.21- இந்தியாவின் 75வது சுதந்திர தின நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதி யாக நடைபெற்ற கடற்படையின் சாகச நிகழ்ச்சிகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிட்டார்.  திங்களன்று இந்தியாவின் 75வது சுதந்திர தின நிறைவு விழா கொண்டா ட்டத்தின் ஒருபகுதியாக கடற்படையின் சாகச நிகழ்ச்சிகள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.  மூன்று நாள் பயணமாக விசாகப் பட்டினம் சென்றுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடலோர காவல்படை கண்காணிப்பு கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் சென்று  நேரில் ஆய்வு செய்தார். கிழக்கு கடற்படை கட்டளையின் 12-வது அணிவகுப்பில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் 60க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் பங்கேற்றன. சுமார் 50 போர் விமானங்கள், வானில் பறந்து சாகசங்களை நிகழ்த்தின.  விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுநர் ஹரிசரன் மற்றும் கடற்படை அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக நிகழ்வில் பங்கேற்க சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விமான நிலையத்தில் வரவேற்றார்.