tamilnadu

img

காவல்துறை அதிகாரிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டால்...

மதுரை:
மோடி தலைமையிலான மத்திய அரசுவேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப்பெறும் வரை... தில்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டக்களமாக மதுரை இருக்கும். போராட் டங்களில் ஈடுபடும் கம்யூனிஸ்ட்டுகளை கயிறுகட்டி ஆடுமாடுகளைப் போல் நடத்துவது உள்ளிட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் காவல் துறை ஈடுபட்டால் அதற்கு பொறுப்பானவர்கள் சட்டமன்ற நிலைக்குழு முன்பும், நீதிமன்றத்திலும் நிற்க நேரிடும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

தில்லியில் போராடும் விவசாயிளுக்கு ஆதரவாக மதுரையில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற மறியலில் பங்கேற்ற மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது:-மதுரை மாநகர் காவல் ஆணையர் கட்டபொம் மன் சிலையிலிருந்து ரயில் நிலையம் வரை பேரணியாகச் சென்று மறியல் நடத்த அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், காவல்துறை பேரணியாகச் சென்றவர்களை அவர்கள் அனுமதித்த இடத்திற்குச் செல்வதற்கு முன்பே தடுத்து நிறுத்தினர். பேரணியாக வந்தவர்கள் காவல்துறை அனுமதித்த ரயில் நிலை சாலை நோக்கி முன்னேறிச் சென்றனர். இதனால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. காவல்துறை அனுமதித்த இடம் வரை பேரணியை அனுமதித்திருந்தால் தள்ளு-முள்ளு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றிருக்காது தில்லி விவசாயிகளுக்கான போராட்டத்தை இடதுசாரிகள் தொடர்ந்து நடத்துவார்கள். இதை மதுரைமாவட்ட நிர்வாகமும். காவல்துறையும் புரிந்துகொள்ள வேண்டும். பேரணியில் சென்றவர்களை மனித உரிமைகளை மீ‘றி ஆடு-மாடுகளைப் போல் கயிற்றை கட்டி தடுத்து நிறுத்தியுள்ளனர்.  கம்யூனிஸ்ட்டுகள் மீது காவல்துறை ஒரு சிறு காயத்தை ஏற்படுத்த நினைத்தால் அதை சகித்துக்கொள்ள முடியாது. மனித உரிமை மீறல்களை கம்யூனிஸ்ட்டுகள் மீது நடத்தினால் நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் நீதிமன்றத்தில்  நிற்க வேண்டிய நிலை ஏற்படும். வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரைகம்யூனிஸ்ட்டுகளின் போராட்டக்களமாக மதுரை இருக்கும். விவசாயிகளின் போராட்டத்தை பார்த்துக்கொண்டு கையை கட்டி அமர்ந்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷாவே அமைதியாக இருக்கிறார். மனித உரிமை மீறலை கடைப்பிடிக் கும் மதுரை காவல்துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் எல்லா வழியிலும் கம்யூனிஸ்ட்டுகள் சந்திப்பார்கள்.

;