tamilnadu

பாகுபாடு குறித்த கண்ணோட்டம் மலையாள சினிமாக்களின் தாக்கம்

தலச்சேரி, டிச.4- தோப்பில் பாசியின் துலாபாரம், நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி னீர்கள் ஆகிய திரைப்படங்கள் சித் தாந்த தெளிவுபெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டுமே சமூக சமத்துவமின்மை எவ்வளவு வலு வானது என்பதை நினைவூட்டிய படங் கள். அந்த படங்களில் ஏழை பணக்கா ரன் வித்தியாசம் தெரிந்தது என நீதிபதி கே.சந்துரு கூறினார்.  கண்ணூர் பல்கலைக்கழக ஜானகி அம்மாள் வளாகத்தில் நடை பெற்ற கருத்தரங்கத்தில் நீதிபதி கே. சந்துரு மேலும் கூறுகையில், ஏ.கே. கோபாலனுக்கும், சென்னை மாகா ணத்துக்கும் இடையிலான வழக்கு, ராஜன் வழக்கு முக்கியமானவை.  

ராஜன் வழக்கின் ஆட்கொணர்வு மனுதான் ஜெய் பீமில் குறிப்பிடப்பட் டுள்ள காவலில் வைத்து கொலை நடக்கும் காட்சிக்கு தூண்டுகோலாக அமைந்தது என்று நீதிபதி சந்துரு கூறி னார். அவசர நிலையின் போது கைது செய்யப்பட்ட மாஹே என்டிசி மில் தொழிலாளியை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவரை மீண்டும் பணியில் அமர்த்த  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தையும் அவர் குறிப்பிட்டார். ஜெய் பீம் திரைப்படம் சமூக நீதி யை உணர்த்தும் படம். காவல்துறை எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட வில்லை. பல லாக்கப் சித்திரவதைக் காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டு அகற்றப்பட்டன. காவல்துறை தானாக முன்வந்து தண்டனை விதிக்க நீதி மன்றமோ நீதிபதியோ அல்ல என்று நீதி பதி சந்துரு தெரிவித்தார்.