சென்னை, ஆக.22- வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் ரூ. 7 கோடியே 58 லட்சத்து 58 ஆயிரம் செலவில் கட்டப் பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், தேனி மற்றும் திருவண்ணாமலையில் ரூ.13 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்ட தலா 50 படுக்கை வசதிகளுடன் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள் ஆகிய வற்றை செவ்வாயன்று (ஆக.22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். மேலும், வேலூர் அரசு பென்ட்லண்ட் மருத்துவ மனை வளாகத்தில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் கட்டப்பட வுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேலும், பணி காலத்தில் உயிரிழந்த 43 பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை யும் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.