நாகர்கோவில், டிச.12- கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசின் ரப்பர் கழகத்துக்கு சொந்தமான தோட்டங்க ளில் உள்ள 40 வருடங்கள் வளர்ந்து முதிர்ந்த 2 லட்சம் ரப்பர் மரங்களை ஆண்டுக்கு 50 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளில் வெட்டி அகற்றவும் புதிய ரப்பர் மரக்கன்றுகளை நடவும் உத்தரவிட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலு வலக நாஞ்சில் கூட்டரங்கில், அரசு ரப்பர் கழக தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுட னான கலந்துரையாடல், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் அரசு ரப்பர் கழக தலைவர் சையத் முஜம்மில் அப்பாஸ் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், நிர்வாக இயக்குநர் (அரசு ரப்பர் கழகம்) தின்கர் குமார் ஆகியோர் முன்னிலையில் சனியன்று (டிச.11) நடை பெற்றது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி யில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்தி ரன் கலந்து கொண்டு, ரப்பர் கழக தொழிற் சங்க பிரதிநிதிகளின் பல்வேறு கோரிக்கை களை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தெரி விக்கையில், கன்னியாகுமரி ரப்பர் தோட்டக் கழகத்தின் கீழ் பணிபுரியும் தொழி லாளர்களின் நீண்ட நாள் பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை புரிந்து, ரப்பர் கழக தலைவர், நிர்வாக மேலாளர், அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. தினசரி ரூ.50 என தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப் பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் ரூ.500 ஆக சம்பளம் உயர்ந்திருக்கிறது. சம்பளம் உயர்த்தப்பட்டு வருகிறதே தவிர குறைக்கப்படவில்லை. நிர்வாகம் சார்பில் எவ்வளவு சம்பளம் உயர்த்தமுடியுமோ அதனை செய்துகொண்டு வருகிறோம். எனவே, தொழிலாளர்கள் அரசால் வழங்கப்படும் சம்பளத்தினை பயன் படுத்திக்கொண்டு, அரசு ரப்பர் கழக இலாப வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட இன்னல்களை மறந்துவிடுங்கள். இந்த அரசு இலாபம் மட்டும் என்று கணக்கில் கொள்ளாமல், நஷ்டம் ஏற்படும்போதும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு மக்களின் அரசாகவும், நமது அரசாகவும் செயல்பட்டு வருகிறது. ரப்பர் தோட்டத்தை பொறுத்தவரை இன்றைக்கு உள்ள ரப்பரை இன்றைக்கே எடுத்தால் தான் பயன்படுத்த முடியும். 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் ரப்பர் எடுப்பது பயன ற்றது இதுகுறித்து அனைவருக்கும் தெரி யும். தொழிலாளர்கள் அரசு ரப்பர் தோட்டங் களை தங்களது தோட்டம்போல் கருதி தங்களது பணிகளை திறம்பட செய்ய வேண்டும்.
கடந்த 10 வருடங்களில் ரப்பர் தோட்டங் களின் வளர்ச்சி சரியாக கையாளப்பட வில்லை. எனவே, தொழிலாளர்களின் சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள், தொழிலா ளர் நல அலுவலர்கள், இயக்குநர்கள், வனத்துறை அலுவலர்கள் உட்பட அனை வரும் ரப்பர் கழகத்தில் எவ்வளவு மரங்கள் இருக்கிறது. ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம், கடந்த காலங்களி லிருந்து எவ்வளவு சேமிப்பு என்பது குறித் தும் தெரிவிக்கும்பட்சத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் உங்களின் சார்பில் நான் எடுத்துக்கூறி, விரைவில் தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்ப்ப தற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், 35 வருடங்கள் ஆன ரப்பர் மரங்களிலிருந்து ரப்பர்பால் சரியாக கிடைப்பதில்லை. எனவே, 40 வருடங்க ளுக்கு மேல் எவ்வளவு மரங்கள் உள்ளது என்பது குறித்து கணக்கிடப்பட்டதில், 2 லட்சம் மரங்கள் உள்ளன. அதில் இந்த வரு டத்திற்கு மார்ச் மாதம் முன்பாக 50 ஆயிரம் மரங்களை வெட்டுவதோடு, வெட்டப்பட்ட மரங்களில் புதிய மரக்கன்றுகள் நடு வதற்கான பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் வெட்டினால் அதனை சரியான விலைக்கு வாங்குவதற்கான வாய்ப்பு இருக்காது, லாபம் குறைவாக கிடைக்கும். எனவே, வெட்டப்பட்ட மரங்களை நல்ல விலைக்கு விற்க வேண்டும் என்பதால், வருடத்திற்கு சராசரியாக 50 ஆயிரங்கள் மரங்கள் வெட்டப்படும். 4 வருடங்களில் வயது முதிர்ந்த மரங்கள் இருக்க கூடாது என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள தோடு, தங்களது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டுமெனவும், தவறும்பட்சத் தில் துறை ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 23.98 சதவிகிதம் மரங்களே உள்ளன. 1 இலட்சத்து 30 ஆயி ரம் ச.கி.மீ நிலப்பரப்பளவு உள்ளது. எனவே இதை 33 சதவிகிதம் மரங்கள் என்ற எண்ணிக்கையாக மாற்ற வேண்டுமென முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சராசரி யாக வருடத்திற்கு 3 கோடி மரக்கன்று கள் நடவு செய்தால் மரங்களின் எண் ணிக்கையை 33 சதவிகிதமாக அதிகரிக்க முடியும். அதற்கான பணிகள் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரிடம் பேசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அயனி உட்பட அனைத்து மரங்களும் வெட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தரிசு நிலங்க ளிலுள்ள மண்ணின் தன்மைகேற்றவாறு உள்ள மரங்களை வளர்க்க வேண்டும் அப்போதுதான் நமது மாநிலத்தில் அதிக மரங்களை வளர்க்க முடியும். அதனடிப்ப டையிலும், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இக்கூட்டத்தில், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி.பிரின்ஸ், மாவட்ட வன அலுவலர் மு.இளையராஜா, முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன்,அரசு ரப்பர் கழக பொது மேலாளர் சி.குருசுவாமி மற்றும் தொழிலாளர்களின் சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டார்கள். கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலையினை வனத் துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.