சென்னை, செப். 24- நாடு முழுவதும் நவ.26 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தேசிய துறை முகத் தொழிலாளர் சம்மேளனங்க ளின் கூட்டு ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. இந்தியாவில், அரசு சொந்த மான 11 பெருந்துறைமுகங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 20ஆயிரம் நிரந்தர தொழி லாளர்கள், 1.30 லட்சம் ஓய்வூதி யம் பெறுகிறவர்கள் உள்ளனர். இவர்களுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2022 ஜூன் மாதம் துறைமுகங்களின் ஆணையக் குழுத் தலைவர் ராஜிவ் ஜலோட்டா தலைமையில் புதிய சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு 6 மாதத்தில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டது. 4 முறை பேச்சுவார்த்தை நடை பெற்றும் ஊதிய ஒப்பந்தம் ஏற்பட வில்லை. இதனால் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் செப்.23-24 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சி யாக நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் துணை ஒருங் கிணைப்பாளர் டி.நரேந்திரராவ் கூறியதாவது: ஒப்பந்த காலம் முடிந்து 20 மாதங்களை கடந்து விட்டது. 4 முறை பேச்சுவார்த்தை நடந்த பிறகும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படவில்லை. துறைமுக பயனீட்டாளர்களை ஈர்க்கும் கண்காட்சிகளையும், சர்வதேச கடல்சார் வர்த்தக உச்சி மாநாட் டையும் நடத்துவதில் மட்டுமே துறைமுக நிர்வாகங்களும், அதிகாரிகளும் ஆர்வமாக உள்ளனர். மறுபுறம் ஊழியர்க ளின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, நவ.17-19 தேதிகளில் தொழிலாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்று வது, 19ந் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று முடிவெடுத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக நவ.26 அன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும். இந்நிலையில் தொழிற்சங்கங்கள் எந்நேரமும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளன. ஊழியர்களுக்கு உற்பத்தி யுடன் இணைந்த ஊக்கத் தொகை (போனஸ்) 3 வருடங்களாக வழங்கவில்லை. இதன்மீது பேச்சு வார்த்தை நடந்து முடிவு எட்டப் பட்டும் போனஸ் வழங்காமல் உள்ளதை, பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, கூட்டு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.கே.சமந்த்ராய், ஒருங்கிணைப் பாளர் பி.எம்.முஹம்மது ஹனீப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.