tamilnadu

img

நிவர் புயல்: ரயில்கள் ரத்து

மதுரை:
நிவர் புயல் புதனன்று சென்னை அருகே கரையைக் கடப்பதால், கீழ்க்கண்ட ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதுரையிலிருந்து புதன் கிழமை புறப்பட வேண்டிய மதுரை - சென்னை - மதுரை தேஜாஸ் சிறப்பு ரயில், மதுரை-சென்னை-மதுரை வைகை சிறப்பு ரயில், காரைக் குடி-சென்னை-காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில், சென்னை - செங்கோட்டை-சென்னை பொதிகை சிறப்பு ரயில், திருநெல்வேலி - சென்னை- திருநெல்வேலி நெல்லை சிறப்பு ரயில், தூத்துக்குடி-சென்னை-தூத்துக்குடி முத்துநகர் சிறப்பு ரயில், சென்னை-கன்னியாகுமரி-சென்னை சிறப்பு ரயில், சென்னை-கொல்லம்-சென்னை அனந்தபுரி சிறப்பு ரயில், இராமேஸ்வரம் - சென்னை- இராமேஸ்வரம் சிறப்பு ரயில், தென்காசி வழியாகச் செல்லும் சென்னை-கொல்லம்-சென்னை சிறப்பு ரயில், சென்னை-மதுரை-சென்னை பாண்டியன் சிறப்புரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.