tamilnadu

நியூயார்க் குடியிருப்பில் தீ விபத்து!

குபேரபுரி என அழைக்கப்படும் அமெரிக்காவிலும் ஏழை எளிய மக்கள் வறுமையில் வாடுவதை காணமுடியும். நியூயார்க் மாநிலத்தில் பிரான்க்ஸ் (Bronx) என்ற நகரில் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு ஒன்றில் ஜனவரி 9 இல் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் இறந்தனர். 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நியூயார்க்கின் சமீபத்திய வரலாற்றில் இது மிகத் துயரமான சம்பவங்களில் ஒன்று. இதற்கு காரணம் நகர நிர்வாகமும் ஹவு சிங் காம்ப்ளக்ஸ் உரிமையாளரின் அலட்சியமுமே என சமூக ஊழியர்களும் குடியிருந்தவர்களும் கூறுகின்றனர். நியூயார்க் சிட்டி தீயணைப்புத்துறை, தீ விபத்திற்கு பழுதடைந்த ஒரு எலக்ட்ரிக் ஹீட்டர் காரணம் எனக் கூறுகிறது. தானாக மூடும் கதவுகள் பயன்பாடு சட்டப்படி அமலாக்க வேண்டும் .ஆனால் சம்பவம் நடந்த அன்று கதவு தானாக மூடவில்லை.  நியூயார்க் நகரில் கடந்த வெயில் காலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 13 பேர் தரைதளத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். விண்ணை முட்டும் வீட்டு வசதி செலவினத்தால் ஏழை எளிய மக்கள் இப்படிப்பட்ட பராமரிப்பு குறைவான வீடுகளில் வசிக்கின்றனர்.

மையப்படுத்தப்பட்ட சுடுநீர் சப்ளை தானாகவே மூடிக்கொள்ளும் கதவுகளை உறுதிப்படுத்தி இருந்தால் தீ விபத்து ஏற்பட்டு இருக்காது என அருகாமை குடியிருப்பில் குடியிருந்தவர் கூறுகிறார்கள். கட்டடங்களின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி புகார்கள் ஏராளமாக அளிக்கப்பட்ட போதிலும் நகராட்சி நிர்வாகமோ காம்ப்ளக்ஸ் உரிமையாளரோ கவனம் செலுத்தவில்லை .உலகின் மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்காவில் அமெரிக்க முதலாளித்துவத்தின் மையமான நியூயார்க் நகரில் நடந்த தீ விபத்து குறித்து நடாலியா என்ற பத்திரிகையாளர் தீ விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று விவரங்களை சேகரித்தார். நகராட்சி அதிகாரிகளின் அலட்சியங்களே குடியிருப்புகளின் மோசமான பராமரிப்புக்கு காரணம். தானாக மூடும் கதவுகள் தயாரிக்கும் கம்பெனிகள் அரசின் மானியத்தை ஏராளமாக பெறுகின்றன .ஆனாலும் கதவுகளில் குறைபாடு காண முடிகிறது.  உலகம் முழுவதும் அடிப்படை வீட்டுவசதி தேவைக்காக மக்கள் போராடுவதை காணலாம். பல முதலாளித்துவ நாடுகளில் ,வறுமை ,பசி, வீட்டுவசதி, கல்வி போன்றவை அடிப்படை அத்தியாவசிய தேவைகள் ஆக கருதப்படுவதில்லை. முதலா ளித்துவம் முர்தாபாத்!