tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம் அறிமுகம்! 

இன்ஸ்டாகிராமில் புகைப் படங்கள் மற்றும் வீடியோக் களை 3:4 தோற்ற விகிதத்தில் பதிவேற் றம் செய்யும் புதிய அம்சத்தை மெட்டா  நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  இது குறித்து இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மோசேரி கூறுகை யில், தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்ஃபோன் கேமராக்களில் 3:4 தோற்ற விகிதத்தில்தான் புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்படுகின்றன; இதனை க்ராப் (Crop) செய்யாமல் அப்படியே இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வகை யில் தற்போது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை 3:4 தோற்ற விகிதத்தில் (அதாவது Potrait வடிவில்) பதிவேற்றம் செய்யும் புதிய அம்சம் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் 1:1 மற்றும் 4:5 தோற்ற விகிதத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் அம்சம் இருக்கிறது. ஆனால் இந்த தோற்ற விகிதங்களில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யும் போது, புகைப்படத்தில் சில பகுதிகள் க்ராப் செய்ய வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, இன்ஸ்டாகிராமில் உங்கள் நண்பர்கள் லைக் செய்யும் வீடியோக்களை உங்கள் Reels Feed-இல் காண்பிக்கும் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

‘சர்ச் லைவ்’ அம்சத்தை சோதனை செய்யும் கூகுள்!

கூகுளின் ஏஐ தேடலில், குரல் மூலம் இயக்கப்படும் ‘சர்ச் லைவ்’ (Search Live) எனும் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 2025-இன் கூகுள் டெவலப்பர்களுக்கான கருத்தரங்கில் இந்த அம்சம் குறித்து அப்டேட் வெளியிடப்பட்டது. கூகுள் செயலியில் இந்த அம்சமானது, தற்போது அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. சர்ச் லைவ் அம்சம் மூலம் பயனர்கள், தங்களுக்கு தேவையான தகவல்களை குரல் மூலம் கேள்வியை உள்ளிட்டு, தேடலை மேற்கொள்ள முடியும். அதற்கான பதில்களும் குரல் வடிவில் கூகுள் வழங்கும். நாம் கேட்கும் கேள்விகளுக்கு அடுத்தடுத்து குரல் பதில்களை வழங்கி, பயனர்களுக்கு உரையாடல் போன்ற ஒரு அனுபவத்தை தரக்கூடியது என்று கூகுள் தெரிவித்துள்ளது.  பயனர்களுக்கு தேவைப்படும்போது, ஆடியோவை mute செய்து, கூகுள் தேடலில் பதில்களை transcripts ஆகவும் பெற்று படித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹியூமனாய்ட் ரோபோக்களை தயாரித்து வரும் அமேசான்!

டெலிவரி ஊழியர்களின் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்ட ஹியூமனாய்ட் ரோபோக்களை அமேசான் நிறுவனம் உருவாக்கி வருகிறது.  இந்த ஹியூமனாய்ட் ரோபோக்கள், ரிவ்வியன் வாகனம் மூலம் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் வகையில் உருவாக்க திட்டமிட்டுள்ளது.  இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான டெலிவரி ஊழியர்கள் தங்கள் பணியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹியூமனாய்ட் ரோபோக்களை உருவாக்க, கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது அலுவலகம் ஒன்றில் ‘ஹியூமனாய்ட் பார்க்’ என்ற சோதனை கூடத்தை அமைத்து வருவதாக ‘தி இன்ஃபர்மேஷன்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஹியூமனாய்ட் ரோபோக்களை இயக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களை உருவாக்க பிற நிறுவனங்களை சார்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.