tamilnadu

img

கருப்பு பணத்தை கடுகு டப்பாவில் தேடிய மோடி சுதர்சன நாச்சியப்பன் விலாசல்

மதுரை, ஏப்.11-திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஊர்மெச்சிகுளத்தில் புதனன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாவட்ட பிரதிநிதி என்.எஸ்.மணி தலைமை வகித்தார். ஜி.பாலமுருகன் முன்னிலை வகித்தார். திமுக பேரூர் செயலாளர் ஆர்.கே.ஜெயராமன், முன்னாள் சேர்மன் எம்.மனோகரன், கே.ராஜாமணி, மதிமுக பூமிநாதன், விசிக மாரியப்பன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.உமாமகேஸ்வரன், கே.முருகேசன் ஆகியோர் பேசினர்.நிறைவு செய்து காங்கிரஸ் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் பேசியதாவது:மோடியின் அரசியல் வரலாறு காணாதரபேல் ஊழல், நாட்டையே உலுக்கிக் கொண்டுள்ளது. 2014-2015ல் மோடி ஆட்சியில்பேச்சுவார்த்தை நடத்தி 1500 கோடி தருகிறோம் என கூறியும், 128 விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்கள் போதும் என்று கூறி ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள். இந்தபேரத்தில் அம்பானி பெருத்த லாபம் பெறுகிறார். இதனால் ராணுவ ரகசியங்கள் வெளியே செல்லாதா? மத்தியப்பிரேதசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விவசாயக் கடன்களை ரத்து செய்வோம் என கூறினோம்.


எல்லாவிதமான விவசாய கடன்களையும் ரத்து செய்தோம். ஆனால்மோடி ஆட்சியில் மக்களின் பணத்தைமோசடி செய்கிறார்கள். எஸ்.பி.ஐ.,இந்தியன் வங்கி என 12க்கும் மேற்பட்டவங்களின் பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. மோடி அப்படி ஏமாற்றியவர்களைப் பிடிக்கப்போகிறோம் என கூறுவதோடு சரி, இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கருப்புபணம் ஒழிப்பு என கூறி கடுகு டப்பாவில் பாட்டி வைத்திருந்த பணத்தை வெளியே கொண்டு வந்தாரே தவிர வெளி நாட்டிற்குசென்ற பணத்தை மீட்டெடுக்க முடியவில்லை. இது தான் மோடி.ஜிஎஸ்டியால் சாதாரண சிறு, குறு தொழில்கள் நசுக்கபட்டன. இட்லி சாப்பிட் டால் கூட வரி. அந்த அளவிற்கு மக்கள் மீதுவரி போட்டு விட்டார். ஜெயலிலதா இறப்பதற்கு முன் இதனை எதிர்த்தார். அவர் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என கூறுபவர்கள்.இதை எதிர்க்கவில்லை. மோடி ஆட்சியும், எடப்பாடி தலைமையிலான பினாமி ஆட்சியும் வெளியேற வேண்டும். மதுரையில் போட்டியிடும் வேட்பாளர் சு.வெங்கடேசன் எழுத்தாளர், திறமையானவர், மக்கள் நலனில் அக்கறை கொண்டவர். எனவேஅதற்கு அவரை நீங்கள் நாடாளுமன்றத் திற்கு அனுப்பினால் உங்கள் கை ஓங்கும்.எனவே நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம். இவ்வாறு அவர் பேசினார்.

;