குஜராத் படுகொலைக்கு மோடி உடந்தை நேதன்யாகுவை போல மோடியும் போர்க் குற்றவாளிதான் நியூயார்க் மேயர் வேட்பாளர் குற்றச்சாட்டு
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நியூயார்க் மேயர் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி இந்தியப் பிரதமர் மோடியை விமர்சித்துள்ள காணொலி மீண்டும் வைரல் ஆகி வருகிறது. அந்த காணொலியில் என்னுடைய தந்தையின் குடும்பத்துக்கு குஜராத்தான் பூர்வீகம். அது ஓர் இஸ்லாமிய குடும்பம். நானும் இஸ்லாமியர்தான். 2002 இல் குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்களை படுகொலை செய்த பெரும் கலவரத்துக்கு மோடி உடந்தை யாக இருந்தார். படுகொலையை நரேந் திர மோடி திட்டமிட்டு நடத்தினார். இஸ்ரே லின் பிரதமர் நேதன்யாகுவை போல மோடியும் ஒரு போர் குற்றவாளிதான் என கடுமையாக அந்த காணொலியில் விமர்சித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னணி இயக்குநர் மீரா நாயரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.