tamilnadu

img

நடமாடும் தேநீர் ஊர்திகள்: முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை, டிச.15- தமிழக அரசின் சிறப்புப் பகுதி  மேம்பாட்டுத் திட்டத்தின் வாயி லாக ரூ. 3 கோடி மதிப்பீட்டி லான நடமாடும் தேநீர் ஊர்தி களை முதல்வர் ஸ்டாலின்  கொடியசைத்து புதனன்று (டிச.15) தலைமைச் செயலகத் ்தில் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தேயிலைத் தோட்ட நிறுவனம் , சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிதாக நடமாடும்  தேநீர் ஊர்திகள் தொடங்கப் ்பட்டுள்ளன. இதற்கென சுமார் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 20  நடமாடும் இண்ட்கோ தேநீர் ஊர்திகளை முதல்வர் ஸ்டா லின் கொடியசைத்துத் தொடங்கி  வைத்தார். தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை சார்பில் சென்னையில் 10 ஊர்திகளும், திருப்பூரில் 3 ஊர்திகளும், ஈரோட்டில் 3 ஊர்திகளும், கோயம்புத்தூரில் 4 ஊர்திகளும் என மொத்தம் 20 தேநீர் ஊர்திகள் செயல்பட உள்ளன.

கலப்படமற்ற, தரமான தேநீர் பொதுமக்களுக்குக் கிடைக்க இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையில் ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் மாநிலத்தில் நகர்ப் பகுதி களில் திட்டமிட்டபடி சீரான  வளர்ச்சியை உறுதி செய்வதற் ்காக நகர் ஊரமைப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது. முறைப் படுத்தப்பட்ட வளர்ச்சியை நகரப் பகுதிகளில் ஏற்படுத்திட மண்டலத் திட்டங்கள், முழுமைத் திட்டங்கள், புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து செயல்படுத்துவது, மனைப் பிரிவுகள், மனைகள், கட்டிடங்கள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் திட்டங்களில் மாற்றங்கள் செய்தல் போன்ற பணிகளை இவ் வியக்கம் செய்து வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை ஆற்றி வரும்  நகர் ஊரமைப்பு அலுவலக கட்டிடத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்டும் வகையில், மதுரை மாநகர், கூடல்புதூரில் தரை மற்றும் முதல் தளத்துடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வலுவலகம், இணை மற்றும் உதவி இயக்குநர்கள் அலுவலக அறைகள், பணியாளர்கள் அறைகள், கூட்டரங்கு உள்ளிட்ட வசதி களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

;