tamilnadu

img

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போடி அருகே பால் உற்பத்தியாளர்கள் மறியல்

தேனி ,அக்.19- பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்கத்தின் சார்பில் போடி அருகே கறவை மாடுகளு டன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பால் கொள்முதல் விலை யை பசும் பால் லிட்டருக்கு ரூ. 42,எருமை பாலுக்கு லிட் டருக்கு ரூ.51 உயர்த்த வேண்டும்  என வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்கத்தின் சார்பாக தேனி மாவட்டம்  சில்ல மரத்துப்பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு பி கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன் துவக்கி வைத்து பேசினார். விவசாயிகள் சங் கத்தின் தேனி மாவட்ட தலை வர் எஸ் கே பாண்டியன், பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் எச் ஜெயக்குமார், செயலாளர்  கே. செல்வ ராஜ், விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் எல்,ஆர். சங்கரசுப்பு  ஆகியோர் ஆத ரித்து பேசினர் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போடி தாலுகா செயலாளர் எஸ் செல்வம், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பால் உற்பத்தி யாளர்கள் கலந்து கொண்ட னர்.