tamilnadu

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு மத்திய அரசு தமிழில் பதிலளிக்க கோரும் மனு... விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு...

மதுரை:
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்,  தமிழக மக்களுக்கும் மத்திய அரசு தமிழில்தான் கடிதம் அனுப்பவேண்டுமெனக் கூறி தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு  விசாரணைடிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ மத்திய ரிசர்வ் படையில் குரூப்“பி” மற்றும் குரூப் “சி” பிரிவில்780 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு டிச. 20-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் தேர்வு மையம் அமைக்கவில்லை.தமிழகம், புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலனுக்காக இரு பகுதிக்கும் சேர்ந்து குறைந்த பட்சம் ஒரு தேர்வு மையம் அமைக்க வேண்டுமென உள்துறை அமைச்சகம் மற்றும்  சி.ஆர்.பி.எப் பொது இயக்குநருக்கு அக். 9-ஆம் தேதி கடிதம் அனுப்பினேன். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், நவ. 9-ஆம் தேதி இந்தி மொழியில் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். இதனால் அதில் என்ன கூறியிருந்தார் என்பதை அறிய முடியவில்லை. ஹிந்தியில் பதில் அளித்தது சட்ட விதி மீறலாகும்.  இது தொடர்பாக உள்துறை இணை அமைச்சகத்திற்கு நவ.19-ஆம் தேதி எழுதிய கடிதத் திற்கு இதுவரை பதில் வரவில்லை. ஹிந்தியில் அனுப்பியகடிதத்தை திரும்பப் பெறவோ, ஆங்கிலத்தில் கடிதம் அனுப்பவோ நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக மக்களவை உறுப்பினர்களுக்கு ஹிந்தியில் மட்டுமே பதில் அளிக்கும் நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யக்கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பும் கடிதங்களுக்கும் ஹிந்தியில் பதிலளிப்பது தொடர் கிறது. தமிழக அரசுக்கும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கள் மற்றும் தமிழக மக்களுக்குஹிந்தி மொழியில் கடிதம் அனுப்பக்கூடாது.  ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்என மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், “மதுரை மக்ளவை உறுப்பினருக்கு அனுப்பிய கடிதத்தில் ஆங்கில இணைப்பு  இணைக்காமல் தவறுதலாகஅனுப்பப்பட்டது. பின்ஆங்கிலக் கடிதமும் அனுப்பப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.மதுரை மக்களவை உறுப்பினர் தரப்பில் கூறும்போது, “புதியநாடாளுமன்ற கட்டட அடிக்கல்நாட்டு விழாவிற்கு அனுப்பப் பட்ட கடிதமும் ஹிந்தியில் அனுப்பப்பட்டது. வியாழனன்று அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இரண்டு தினத்திற்கு முன்புதான் ஆங்கிலக் கடிதம் தங்களைவந்தடைந்ததாக தெரிவித்தனர்.அப்போது நீதிபதிகள்  இந்தியா பல மொழிகளைக் கொண்டது. இது போன்று மொழி சம்பந்தமான பிரச்சனைகள் மீண்டும் தொடரக்கூடாது எனக் கூறி மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;