மதுரை,டிச.12- மதுரை மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்திற்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் வெளியிட்ட உத்தரவு தற்போது திரும்பப் பெறப்ப ட்டுள்ளது. கொரோனா 3-வது அலையைத் தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே மதுரை மீனாட்சி யம்மன் கோயிலில் அனுமதிக்கப்படு வார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்தது. தமிழகத்தில் பொது இடங்களுக்கு வருப வர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ள தைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்குப் பொது இடங்களில் இனி வரும் காலங்களில் அனு மதி இல்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் வெளியிட்ட உத்தரவில், “2 தவணை தடுப்பூசி செலுத்தி யவர்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்ப டுவார்கள் எனவும், கோயிலுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலு த்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தி ருந்தது.
நிர்வாகக் காரண ங்களுக்காகத் தற்போது இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் சார்பாக இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்டுள்ள அறிவி ப்பில், “கொரோனா நோய் 3-வது அலை தொற்றுத் தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வழிகாட்டுதல்படி, கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே 13.12.2021ஆம் தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என வெளியிடப் பட்ட அறிவிப்பு நிர்வாகக் காரண ங்களுக்காகத் திரும்பப் பெறப்படுகிறது. மேலும் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனும திக்கப்படுவார்கள்” என கூறப்பட்டுள்ளது.