புதுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்ற மே தினப் பேரணி – பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை, மே 1- சிஐடியு, ஏஐடியுசி சார்பில் மே தினப் பேரணி – பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை வின் அதிரும் கோரிக்கை முழக்கங்களுடன் எழுச்சியுடன் நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் திலகர் திடலை வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் உ.அரசப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன், ஏஐடியுசி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், சிஐடியு மாவட்டச் செயலளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ப.ஜீவானந்தம், சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ். தேவமணி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்ட கவுரவத் தலைவர் வீ.சிங்கமுத்து உள்ளிட்டோர் பேசினர். பேரணி-பொதுக்கூட்டத்தில் இரண்டாயித்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மயிலாடுதுறையில் ஜாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், மே தின பேரணி சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கலைச்செல்வன் தலைமையில் வியாழனன்று மாலை நடைபெற்றது. டி.இ.எல்.சி பள்ளி அருகிலிருந்து துவங்கிய பேரணி, காந்திஜி ரோடு, கிட்டப்பா அங்காடி, பட்டமங்கலத்தெரு, மணிகூண்டு வழியாக சின்னக்கடைத்தெருவில் நிறைவடைந்தது.