மதுரை, செப்.13- தமிழக அரசு குடும்பப் பெண்களுக்கு ரூ.1000 வழங்குவதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில் நிறுத்தப் பட்டுள்ள மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தையும் அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று சங்கத்தின் மாநி லப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி வலியுறுத்தி னார். மாதர் சங்கத்தின் மாநிலக்குழுக்கூட்டம் செப்டம்பர் 13 அன்று மதுரையில் நடைபெற் றது. இதையொட்டி செவ்வாயன்று செய்தியா ளர்களிடம் பி.சுகந்தி கூறியதாவது:- தமிழக அரசு குடும்பப் பெண்களுக்கு ரூ.1000 வழங்குவதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது. இத்திட்டத்தை கால தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திரு மண உதவித் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. திட்டம் நிறுத்தப்பட்டதால் ஏழைப் பெண்களுக்கு திரு மணம் செய்து வைக்க முடியாமல் பல குடும்பங் கள் தவிக்கின்றன. 3 கிராம் தங்கம், 6 கிராம் தங்கம், ரூ.25 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கம் கிடைத்ததன் மூலம் பல குடும்பங் கள் பலனடைந்தன. வறிய மக்களின் நிலையை கணக்கில் கொண்டு இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இன்றைக்கு கருமுட்டை விற்பனை, வாட கைத் தாய்மார்கள் மற்றும் சிலர் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவது போன்ற பிரச்சனை கள் தலைதூக்கியுள்ளது. இதற்குக் காரணம் வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம் ஆகி யவை தான். இது போன்ற சம்பவங்களை தடுக்க பெண்களுக்கென ஆக்கப்பூர்வமான, பய னுள்ள திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
மாணவிகள் தற்கொலை
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட வர்களில் அதிகம் பேர் மாணவிகள். இதற்குக் காரணம் திணிக்கப்படும் கல்விக்கொள்கை அழுத்தம், பாடச்சுமை, பெற்றோர்கள் கொடுக் கும் அழுத்தம், கல்வியில் நிலவும் சமச்சீரமற்ற நிலை ஆகியவை தான் காரணம். நீட் தேர்வால் மட்டுமல்ல. பள்ளிகளிலும் மாணவிகள் தற் கொலை செய்த நிகழ்வுகளும் உள்ளது. எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல. தமிழக அரசு பள்ளி அளவில் மனநல ஆலோசகர் களை நியமிக்க வேண்டும். இதன் மூலம் மாணவி களின் மன அழுத்தம் குறையும். செப்டம்பர் 29, 30 அக்டோபர் 1 ஆகிய தேதி களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் மாநில மாநாடு கடலூரில் நடைபெறு கிறது. 29-ஆம் தேதி நடைபெறும் பேரணியில் சுமார் 20 ஆயிரம் பெண்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் அகில இந்தியப் பொதுச் செயலா ளர் மரியம் தாவ்லே, திரைக்கலைஞர் ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தங்களது சொந்தப்பிரச்சனை, குடும்பப் பிரச்சனைகளையொட்டி மாதர் சங்கத்திற்கு வந்த பெண்கள் பலர் இன்று அமைப்பின் முன்னோடி நிர்வாகிகளாக உள்ளனர். தமிழக அளவில் பெண்களை திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட் டம் துடியலூரைச் சேர்ந்த பெண், கடலூர் ரேவதி, திருவண்ணாமலை நந்தினி என ஏரா ளமானோர் மாதர் சங்கத்தில் உள்ளனர். குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சமூக நீதிக் காகப் போராடிய பலர் மாநாட்டில் கௌரவிக்கப் பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலச் செயலாளர் ஆர்.சசிகலா கூறுகை யில், முதியோர் பென்சன் மதுரை மாவட்டத்தில் பெரும் பிரச்சனையாக உள்ளது. இரண்டு சிலிண் டர் வைத்திருந்தால் முதியோர் உதவித்தொகை கிடையாது என்கின்றனர். உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்தால் அதிகாரிகள், அதற் கும் “ஒரு அளவு கோல்” உள்ளது என்கின்ற னர். இதுகுறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார். பேட்டியின் போது மாநிலத்தலைவர் எஸ்.வாலண்டினா, மதுரை மாநகர் மாவட்டப் பொரு ளாளர் லதா உடனிருந்தனர். மாநிலக்குழுக்கூட்டத்தில் அகில இந்திய துணைத்தலைவர்கள் உ.வாசுகி, சுதாசுந்தர ராமன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ஜென்னியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண் டனர்.