புதுதில்லி, அக்.19- மகாராஷ்டிராவில் 18 மாவட்டங் களில் உள்ள 1165 கிராம பஞ்சாயத்து களுக்கு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. 91 கிராம பஞ்சாயத்துகளில் தனியாக ஆட்சி நிர்வாகத்தை கைப் பற்றியுள்ளது. 100க்கும் மேற்பட்ட பஞ்சா யத்து வார்டுகளில் சிபிஎம் வேட்பாளர் கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாசிக் மாவட்டத்தில் உள்ள 194 பஞ்சாயத்துகளில் 59 பஞ்சா யத்துகளை தனியாக கைப்பற்றி சிபிஎம் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவ தாக மகாராஷ்டிர சிபிஎம் தலைமை தெரிவித்துள்ளது. பாஜக 239 கிராம பஞ்சாயத்துகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான ஷிண்டே தலைமை யிலான சிவசேனா 113 பஞ்சாயத்துகளி லும் வெற்றி பெற்றன. மகாவிகாஸ் கூட்டணி கட்சிகளில், என்சிபி 155 பஞ்சா யத்துகளிலும், சிவசேனா உத்தவ் பிரிவு 153 பஞ்சாயத்துகளிலும், காங்கிரஸ் 149 பஞ்சாயத்துகளிலும் வெற்றி பெற்றன. 2018 இல் வரலாற்று புகழ்பெற்ற விவ சாயிகளின் நீண்ட நடைபயணம் தொட ங்கிய நாசிக்கின் சுர்கானா தாலுகா ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி யுள்ளது. சுர்கானா தாலுக்காவின் 33 பஞ்சாயத்துகளில் அதிகாரத்தை சிபிஎம் கைப்பற்றியது. நாசிக் மாவட்டத்திலேயே, கல்வான் தாலுக்கா வில் எட்டு பஞ்சாயத்துகளையும், த்ரயம்பகேஷ்வரில் ஏழு பஞ்சா யத்துகளையும், திண்டோரியில் ஆறு பஞ்சாயத்துகளையும், பெட் பகுதியில் ஐந்து பஞ்சாயத்துகளையும் சிபிஎம் வென்றது. நாசிக் மாவட்டத்தில் உள்ள 194 பஞ்சாயத்துகளில் 59இல் வெற்றி பெற்று சிபிஎம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
நாசிக்கில், என்சிபி 51 பஞ்சாயத்து களிலும், காங்கிரஸ் ஒன்பது பஞ்சாயத்து களிலும் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 13 பஞ்சாயத்துகள் கிடைத்தன. பால்கர்-தானே மாவட்டத்தில், 26 பஞ்சாயத்துகளில் சிபிஎம் ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ளது. தஹானு தாலுகாவில் ஒன்பது பஞ்சாயத்துகளி லும், ஜவஹரில் ஐந்து பஞ்சாயத்துகளி லும், தலாசாரியில் நான்கு பஞ்சாயத்து களிலும், விக்ரங்காத் மற்றும் வாடாவில் தலா மூன்று பஞ்சாயத்துகளிலும், ஹாஷாபூர் மற்றும் முர்பாத்தில் தலா ஒரு பஞ்சாயத்துகளிலும் சிபிஎம் அதிகாரத்தை பிடித்துள்ளது. அகமது நகர் மாவட்டத்தில் உள்ள அகோல் தாலுக்காவில், ஆறு பஞ்சாயத்துகளில் சிபிஎம் ஆட்சி அமைத்தது. மொத்த முள்ள 91 பஞ்சாயத்துகளில் சிபிஎம் கட்சிக்கு தனித்த பெரும்பான்மை கிடைத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக பல பஞ்சாயத்துகள் உள்ளன. அங்கும் அதிகாரத்துக்கு வர வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிவுகள் பாஜக சிவ சேனா கூட்டணி தலைமையிலான ஷிண்டே அரசுக்கு பெரும் பின்னடை வாக கருதப்படுகிறது. 2018 விவசாயி கள் பேரணியின் வெற்றிக்கு அடித்தள மாக அமைந்தது வன உரிமைச்சட்டத்தை அமல்படுத்தி நிலம் வழங்கவும், உண வுப் பாதுகாப்பை வலியுறுத்தியும், விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை நிர்ணயிக்க வலியுறுத்தி யும் விவசாயிகளும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் நடத்திய போராட்டங் களாகும். தொடர்ச்சியாக நடந்துவரும் போராட்டங்களே இன்றைய வெற்றிக்கு காரணம் என அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் இணை செயலாளர் விஜு கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.