tamilnadu

img

அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் மதுரை விளாச்சேரி பொம்மைகள்

ச.நல்லேந்திரன்

நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப் பில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொம்மைகள், குடில்கள் தயாரிப்பில் மதுரை விளாச்சேரியில் உள்ள 170 குடும்பங்கள் ஈடுபட் டுள்ளன. இவர்கள் வருடத்திற்கு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி மதிப்பிலான பொம்மைகளை  உற்பத்தி செய்கின்றனர். 1965- ஆம் ஆண்டு சதாசிவ வேளார், சூரன் வேளார், தங்கராமன் வேளார் ஆகியோர் தான் பொம்மை தயாரிப்பிற்கு அடித்தளம் அமைத்துள்ள னர். இவர்களோடு ராமலிங்கம் என்பவரும் இணைந்து கிராமங்களில் நிகழும் அய்யனார் கோவில் விழாக்களுக்கு புரவி எடுப்பு (குதிரை ஊர்வலம்) களிமண் குதிரைகளை தயாரித்துக் கொடுத்துள்ளனர். கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் நவ ராத்திரி காலத்தில் பொம்மைகள் விற்பனை சூடுபிடிக்கிறது இங்கு தயாராகும் பொம்மை கள் மாநிலம் முழுவதும் உள்ள காதி கிராப்ட் மற்றும் பூம்புகார் நிறுவனங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அமெ ரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் துபாய் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கிறிஸ்துமஸ் குடில்கள், அது தொடர்பான பொம்மைகளுக்கு கேரளம் ஒரு சிறந்த சந்தையாக உள்ளது. பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விஜயகுமார் கூறியதாவது:- மதுரை விளாச்சேரியில் நவராத்திரிக்காக பெரிய அளவில் கொலு பொம்மைகள் தயாரிக் கப்படுகின்றன. இங்கு 170-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்தந்த சீசனுக்கு ஏற்ப பொம் மைகளை தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர். களிமண், பிளாஸ்டர் ஆப் பாரீஸ், காகிதக்கூழ் மூலம் பொம்மைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. களிமண்ணோடு யானைச் சாணமும் பயன்படுத்தப்படுகிறது. யானையின் சாணம் களிமண்ணோடு இறுகி பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. பொம்மைகளில் வெடிப்பு ஏற்படுவதை இது தடுக்கிறது.

யானைச் சாணம் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. யானைச் சாணம் திருப்பரங்குன்றம், அழகர்கோவில், மீனாட்சிம்மன்கோவில் ஆகியவற்றிலிருந்து எடுத்துவரப்படுகிறது. இதற்கு ஏதும் கட்டணம் இல்லை. போக்கு வரத்துச் செலவு மட்டுமே. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு களிமண், காகிதக் கூழ் ஆகியவற்றால் மட்டுமே தயாரிக்கிறோம்.வீட்டு அலங்காரத்திற்கான பொம்மைகளும் தயாரித்து கொடுக்கிறோம்.  விளாச்சேரியிலிருந்து வருடத்திற்கு ரூ.ஒரு கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரை யிலான பொம்மைகள் உள்நாடு, வெளிநாடு களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குறைந்தது ஒவ்வொருவரும் ரூ. 2லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். பெரும்பாலும் வட்டிக்கு வாங்கித்தான் தொழில் நடத்துகின்றனர். வங்கிகள் கடன் வழங்கினாலும். இவர்கள் உற்பத்தி செய்யும் பொம்மைகளுக்கான பணம் வந்து சேரு வதற்கு நான்கு மாதங்களாகிவிடும். வங்கியில் வாங்குவதும் வெளியில் வட்டிக்கு வாங்கும் கணக்கும் ஒன்றாகத் தானிருக்கும். தமிழகத்தில் காதிகிராப்ட், பூம்புகார் போன்ற அரசுத்துறை நிறுவனங்களுக்கு இவர்கள் பொம்மைகள் தயாரித்து வழங்கு கின்றனர். இதில் பிரச்சனை என்னவெனில் பொம்மைகள் விற்றால் மட்டுமே பணம் தரு வார்கள். இதனால் அடுத்த கட்ட உற்பத்தி பணச் சுழற்சியின்றி தடைபடுகிறது. பொதுவாக வேலை தடையின்றி கிடைக் கிறது. ஆண்டு முழுவதும், பல கட்டங்களாக பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. பொம்மைகளை வார்ப்பது ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் நடைபெறு கிறது. கோடைகாலத்தைப் பயன்படுத்தி ஜூலை வரை பொம்மைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடைபெறும். ஆகஸ்ட்-செப்டம்பரில் விற்பனை தொடங்கும். மழை பெய்ய ஆரம்பித் தால் வேலை தடைபடும். எனவே கோடைகாலத்தில் உற்பத்தி அதிகளவில் இருக்கும். சில வாடிக்கையாளர்கள் தாய் பாட்டிகள் வைத்திருந்த பொம்மைகளைக் கொண்டு வந்து அவற்றிற்கு மீண்டும் வர்ணம் பூசி மெருகூட்டிச் செல்கின்றனர்.

கடினமான வேலையும்...  மானியமும்
இதற்காக தமிழக அரசு மைக்ரோ கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மானியம் வழங்குவதாக அதிகரித்துள்ளது. குறிப்பாக களிமண் எடுத்துவருவது, கரைப்பது, காலால் மிதிப்பது போன்ற கடினமான வேலைகளை எளிதாக்க இந்தப் பணிகளை இயந்திரமயமாக்க இந்தத் தொகை பயன்படுத்தப்பட உள்ளது. ரூ. 4 கோடி மானியத்திற்கான உத்தரவு வழங்கப்பட்டு விட்டது. அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்றார்.

;