tamilnadu

மதுரை முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் போதைப் பொருள்  விற்பனையை தடுக்க தனிப்படை அமைப்பு

விருதுநகர், டிச.4- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி வளாகங்கள் அருகில் போதைப் பொருள் விற் பனையை முழுமையாக தடுக்கும் பொருட்டு, தமிழக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அறிவுரையின் பேரில், விருதுநகர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஆ.மனோகர் உத்தர வின்படி, மாவட்ட குற்றப் பதிவேட்டு கூட துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையில், 12 தனிப் படைகள் அமைக்கப்பட்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  இதில், பள்ளி மற்றும் கல்லூரி வளா கங்களுக்கு அருகாமையில் போதைப் பொருள் விற்பனை செய்த 21 பேர் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா, புகையிலை சம்பந்தப்பட்ட போதைப் பொருட்கள் 6.811 கிலோ கிராம் மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.11,012-ம் கைப்பற்றப்பட்டுள்ளது.  மேலும் இக்குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத் தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்படு வார்கள் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

வீடுகளுக்குள்  புகும் கழிவு நீர் 

சின்னாளப்பட்டி, டிச.4-  திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி-ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் செம்பட்டி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் குறிப்பிட்ட அளவு போடாததால் வீடு களுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளது.  இதனால் இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற் பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  எனவே, நெடுஞ்சாலைத்துறை உடன டியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை சரி செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் அனை வரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் மக்கள் தெரிவித்துள் ளனர். 

நிலக்கோட்டை பகுதிகளில் அதிகளவு மணல் கொள்ளை

சின்னாளப்பட்டி, டிச.4- திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை தாலுகா பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே மண் மற்றும் மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.  இதில் குறிப்பாக பிள்ளையார்நத்தம். சித்தர்கள் நத்தம், அணைபட்டி, மட்டப் பாறை போன்ற வைகை ஆற்று படுகை களில் அதிகளவு மணல் கொள்ளை நடைபெறுகிறது. மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் 24 மணி நேரமும் ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மணல் அள்ளி மதுரை, விருதுநகர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.  இந்நிலையில், வெள்ளியன்று பிள்ளையார் நத்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி இரண்டு டிப்பர் லாரி களில் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் முத்து மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  அப்போது அங்கு சென்ற வருவாய்த் துறை அதிகாரி தங்கபாண்டியம்மாள், கிராம நிர்வாக அதிகாரி ராம்குமார் ஆகி யோர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட வர்களிடம் அரசு அனுமதி உள்ளதா எதற்காக மணல் அள்ளுகிறீர்கள்  என்று கேட்டுள்ளனர்.  பெண் அதிகாரி என்று கூட பாராமல் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரு வரும் அதிகாரிகளை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டலும் விடுத்துள் ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை வட்டாட்சியருக்கும் அதேபோல் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவில்லிபுத்தூரில் கண்மாய் உடைந்து  வீடுகளுக்குள்  நீர் புகுந்தது

திருவில்லிபுத்தூர், டிச.4- திருவில்லிபுத்தூரில் பெய்த கனமழையால் நீர் பெருகிய நிலையில் மொட்டபெத்தான் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு நகர் பகுதிகளான ஓட்டமடத் தெரு, ஆராய்ச்சிபட்டி நாடார் தெரு, ஆத்துக்கடை தெரு, ரைட்டன்பட்டி தெரு உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட தெருக்க ளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் புகுந்தது.  இதனால், மக்கள் மிகவும் அவ திக்குள்ளாகினர். மேலும் திருவில்லி புத்தூர் பிரதான கண்மாயான பெரிய குளம் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இலங்கை அகதிகள் தப்பி செல்ல உதவியதாக மேலும் ஒருவர் கைது

நாகர்கோவில், டிச.4- குமரிக் கடல் வழியாக இலங்கை அகதி கள் தப்பி செல்ல உதவியதாக இலங்கையை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப் பட்டார். குமரி மாவட்டம் குளச்சல் கடல் வழியாக கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை அகதி கள் 60 பேர் படகு மூலமாக இலங்கைக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியானது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடல் வழியாக தப்பிச் சென்றது வெளி மாவட்டங்களில் வசிக்கும் இலங்கை அகதி கள் என்பதும், தப்பி செல்ல முயன்ற போது வேறொரு நாட்டின் கடற்படையின ரிடம் அவர்கள் சிக்கியதும் தெரியவந்தது. அதோடு 60 பேரும் தப்பி செல்வதற்காக படகு தயார் செய்து கொடுத்தது குளச்சல் இயேசு காலனியை சேர்ந்த மீனவரான ஜோசப்ராஜ் (54) என்பதையும் காவல்துறை யினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து ஜோசப்ராஜை கியூ பிரிவு காவல்துறை யினர் கைது செய்தனர்.  மேலும் அகதிகள் தப்பி செல்வதற்கு வேறு யாரும் உதவி செய்து இருக்கி றார்களா? எனவும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, தமிழகத்தில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்த சுகந்தன் (33) என்பவர் உதவி செய்த தகவல் வெளியானது. இதை தொடர்ந்து சுகந்தன் குறித்த தகவல்களை காவல்துறையினர் சேகரித்தனர்.  இந்தநிலையில் அவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னையில் உள்ள புழல் சிறையில் உள்ளார் என்பது தெரிய வந்தது. எனவே சுகந்தனை காவலில் எடுத்து விசாரணை நடத்த கியூ பிரிவு காவல்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுகந்தனை காவல்துறையினர் வியாழனன்று குமரி மாவட்டம் அழைத்து வந்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மனுவை விசாரித்த நீதிமன்றம் சுகந்தனை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி காவல்துறையினர் சுகந்தனை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது இலங்கை அகதிகள் தப்பி செல்வதற்கு சுகந்தனும் உதவியாக இருந்த தகவல் உறுதியானது.  எனவே சுகந்தனும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் தமிழகத்தில் வசித்து வரும் இலங்கை அகதிகள் பலர் வெளிநாடுக ளுக்கு தப்பி செல்லவும் அவர் முக்கிய நபராக செயல்பட்டதாகவும் கூறப்படு கிறது. இந்த வழக்கில் தற்போது வரை 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் மேலும் சிலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. எனவே  சுகந்தனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது.