“க ல்லிலே கலை வண்ணம் கண்டான்” என்கிற திரைப்படப் பாடலின் வரிகள் எந்தக் கோவிலுக்குள் நுழைந்தாலும் என் மனதில் ஓடியபடி இருக்கும். நான் பார்ப்பதெல்லாம் தன் திறமையால் சிற்பத்தை இறைவனாக்கிய கர்ப கிரகத்தை விட,கோவில் வளாகம் முழுவதும் பாறைகளை அழகிய தேவதைகளாக, வீரர்களாக, காலத்தே உறையவைத்த சிற்பியின் திறமைகளைத்தான்.தமிழன் தனது ஆதிவரிவடிவை பாறைகளில் தான் செதுக்கியிருக்கிறான்.அவனது கைக்குக் கிடைத்த முதல் காகிதம் “பாறை” தான். அதில் தான் எழுதப் பழகியிருக்கிறான், வரைய ஆரம்பித்திருக்கிறான், சொத்துக்களை எல்லாம் ஆவணப்படுத்தியிருக்கிறான்.ஆனால்,இந்த கல்வெட்டுக்கள் எல்லாவற்றையும் விட நான் வியந்தது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான் மலையில் எழுதப்பட்டுள்ள பாறையில் உறைந்த இசைக்குறிப்புகள் தான்.
கர்நாடக இசை, மேற்கத்திய இசை, இன்னும் உலகில் எத்தனை வகையான இசைகளல இருந்தாலும் “ச ரி க ம ப த நி் ஸ “ என்ற 7 ஸ்வரங்களுக்குள் சொல் கின்றார்கள். இதன் ஆதிச் சொத்துரிமை நம்மிடமே இருக்கின்றது என்ற வியப்பிலி ருந்து மீள என்னால் பல மணி நேரம் ஆயிற்று. ஒரு ஓவியத்தைப் பார்த்து, ஒரு சிற்பத்தைப் பார்த்து பிரமிக்காத எனது உணர்வுகள் என் மூதாதையரின் இசை அறிவைப் பார்த்து மயங்கி நின்றது. “இசை” என்பது ஒரு இனிமையான ஒலி.எல்லோருக்கும் போல எனக்கும் “இசை” என்றால் பிடிக்கும். இளமைப் பருவத்திலி ருந்தே இசையை நேசித்தேன். எண்ணங் களையும் உணர்வுகளையும் தொடர்பு படுத்தும் நேரத்தில் ஒலியின் ஒரு சிறப்பு “இசை”. அதனால், எனக்கு ஒரு அமைதி இருப்பதை உணர்கிறேன். சரியான வழி யில் தொடர்ந்து செல்வது எளிதானது அல்ல. எனக்கு இசை கேட்பது போலவே இசைப்பற்றி படிப்பதும் பிடிக்கும்.நமது தேவைக்கு ஏற்ப நாம் ரசிக்கக்கூடிய பல்வேறு வகையான இசைகள் உள்ளன. அப்படி,மெதுவாக ஒலிக்கும் இசையைக் கேட்பது எனக்கு நிம்மதியையும் அமைதி யையும் தருகிறது. இசை ஒரு தியானம் போன்றது.முழு மனித சகோதரத்துவமும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பிரபஞ்சம் அருளிய கருவி இசை. இசை ஒரு உலகளா விய மொழி.
என் அப்பா,அம்மா, தாத்தா, பாட்டி இசை கேட்பதில் ஆர்வமுடையவர்கள்.இசையின் மூலமாக நிறைய இசை குடும் பங்கள் கிடைத்தார்கள். இவர்கள் எல்லோ ராலும் இசை எப்போதும் எனக்குள் இருந்துக் கொண்டே இருக்கின்றது. எனக்கு இசை அமைப்புகளைப் பற்றி அதிகம் தெரி யாது. ஆனால், பொதுவாக நான் பயணம் செய்யும் போதோ அல்லது புத்தக வாசிக்கும் போதோ இசையைக் கேட்டுக் கொண்டே இருப்பேன்.அப்படி,எனது பய ணத்தின் போது நான் மெய்ச்சிலிர்த்துப் பார்த்த ஒன்று “இசைக் கல்வெட்டு”. இங்கே ஆயிரம் கால மண்டபமும் புகழ் பெற்றவை ஆகும்.
நான் இங்கே போனபோது, இது முற்காலக் குறிப்புகளில் “திருநால ககுன்றம்” என்றும் பின்னர் “சிகாநல்லூர்”, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அங்கேயே இருக்கும் ஒருவர் கூறினார். இசை நுணுக்கங்கள் முற்றுமாய் ஆய்வுச் செய்யப்படவில்லை. ஆனால்,வரலாற்றை உறுதி செய்ய உதவுகிறது.முந்தைய வர லாற்றை அறிந்துக் கொள்ளும் ஒரு படைப் பாளியாக வரலாற்றுச் சிறப்புமிக்க சில இடங்களுக்குச் செல்கிறேன். எனக்கு ஏற்றார்போல் நான் சென்ற இடத்தில் சிறப்பாக வளர்ச்சி பெற்றிருந்ததை வர லாற்றுச் சான்றுகளுடன் எனக்கு ஒருவர் காண்பித்தார். “திருநலக்குன்றம்” என்பது ஊரின் பெயர்.நலம் என்றால் சுகம்,சுகம் என்றால் சிகை,சிகை என்றால் குடுமி. எனவே “குடுமியான் மலை” எனப் பெயர் பெற்றது.அங்கே ஒலி எழுப்பாமல் வரு மாறு என்னிடம் பாதுகாவலர் கூறினார். சற்றும் பேச்சின்றி நடந்து அங்குள்ள இசைக் கல்வெட்டுகளைத் தூரத்திலி ருந்தே பார்த்துக் கொண்டே அருகில் சென்றேன்.இசைக் கல்வெட்டு-’சமஸ்கிருத மொழி’ கிரந்த எழுத்துகளில் இருப்பதை முன்பே வாசித்திருக்கிறேன்.அவற்றைத் தொட்டு எழுத்தாகத் தடவிப் பார்த்து மெய்ச்சிலிர்த்துப் போனேன்.விபுலாநந்த அடிகளார் தனது ‘யாழ்’ என்ற நூலில் எழுதியிருக்கிறார்.ஆனால், முழு தான தெளிவான விளக்கம் கிடைக்க வில்லை எனக்கு. ஒரு செம்மையான வாழ்வி யலுக்கும் பயன்படுத்த அனுபவ அறிவு உதவுகிறது.இதன் வாயிலாக இந்திய வரலாற்றைப் பற்றி இன்றையத் தலைமுறை யினர் புரிந்துக் கொள்ள முடிகிறது. பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு பட்ட சமூ கங்களை,சமயங்களைச் சார்ந்த மக்கள் நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் வாழும் சூழலைக் கொண்டது.இது போன்ற பல வரலாற்று அனுபவங்கள் எழுதி யிருக்கிறார்கள். சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் உயர்ந்த எண்ணங்களு டனும் சிறந்த கொள்கைகள் உடனும் வாழ வேண்டும் என்பதே வரலாற்றுச் சொல்லும் பாடமாகும்.மனித நடத்தையில் மாற்றத்தையும் பெருமையும் உண்டாக்கும் வரலாறு.
தலைமுறை தலைமுறையாகஒரு சமுதாயத்தினரிடமிருந்து அடுத்த சமுதாயத்துக்குக் கொண்டுச் சொல் லப்படுவது வரலாற்றுச் சான்றுகள்.இந்த முக்கியத்துவம் வாய்ந்த இசைக் கல்வெட்டானது குடைவரைக் கோயி லின் தென்புறம் மலையின் செங்குத் தான சரிவில்,விநாயகரின் புடைப்புச் சிற்பத்திற்கு அருகில் 13அடி நீளம் மற்றும் 14அடி அகலம் கொண்ட பரப்ப ளவில் “கிரந்த” எழுத்துக்களில் சமஸ் கிருத மொழியில் வெட்டப்பட்டுள்ளது. “சித்தம் நம சிவாய” என்ற வணக்கத்திற் குப் பிறகு. கல்வெட்டு “ஏழு” பிரவு களாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் பல உட்பிரிவு கள் உள்ளன.மேலும், ஒவ்வொரு உட்பிரிவிலும் தலா “4” ஸ்வரங்களின் பதினாறு தொகுப்புகள் உள்ளன. “ஏழு” பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் நான்கு ஸ்வரங்களின் சேர்க்கைகள் குறிப்பி டப்பட்டுள்ளன.நம் இந்திய நாடு பண்பாட்டுச் சிறப்புமிக்கது.அனை வராலும் போற்றத்தக்க வகையில் காணப்படும். அதன் பண்பாட்டுக் கூறுகளை அறிந்துக் கொள்வதற்குப் பல சான்றுகள் உதவுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ள இலக்கியங்கள் துணை புரிகின்றன. மனித வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் காலக் கண்ணாடியே இலக்கி யம்.ஆதலால்,காலத்தின் கோலத்தை அந்தக்கால இலக்கியங்களிலும் இது போன்ற வரலாற்றுச் சான்றுதல்கள் மூலம் காண்கிறோம்.
இப்படி,முக்கியமாக வரலாற்றுச் செய்திகளை பல பிரிவுகளாகப் பகுத் துக் காணலாம். அவை வேதங்கள், இதி காசங்கள்,தரும சாஸ்திரங்கள், பெளத்த சமய இலக்கியங்கள்,தனி இலக்கியங்கள்,நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புறக் கதைப் பாடல்கள், பழ மொழிகள்,புராணங்கள் என்று நிறை யச் சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி,எனது அன்பு அறிவின் மூலமாக மற்றும் எனக்கு முந்தைய தலை முறையினர் இடமிருந்து கற்றுக் கொண்ட வாழ்வியல் திறன்களையும் வாழ்க்கை முறைகளையும் என்னைப் போன்ற இங்கேயிருக்கும் எல்லோ ருக்கும் காடு,வயல்,ஆறு என முழுச் சுதந்திரத்தோடு சுற்றிக் கொண்டி ருந்தேன். பிறகு,வரலாற்றை நோக்கி எனது பாதை பயணிக்க ஆரம்பித்தது,அப்படி ஒன்றுதான் இந்த “இசைக் கல்வெட்டு “ வரலாற்றுப் புத்தகங்களோடுத் திரிந்துக் கொண்டிருக்கிறேன்.அறிவி யிலும்,வரலாற்றின் மையப் பகுதி களும் தனது எழுத்தின் மூலமாகத் தொடர்ந்து விரிந்துக் கொண்டே வரு கிறார்கள். இந்த “இசைக் கல்வெட்டு “ பற்றி எழுத முக்கியக் காரணம்,இது வர லாற்றின் பிரம்மாண்டமானவை மற்றும் வரலாற்றைப் பற்றி அதிகம் சுவாரஸ்யம் தருபவை. தேடத்தேட ஆச்சரியமான தகவல்கள் கொட்டித் தீர்ந்தது எனக்கு. நமது வரலாற்றைப் பற்றி இன்னும் கூட நிறைய பேருக்குத் தெரியாதது வருத்தமே.
நான், முக்கியமாக எதுவும் தெரி யாத மக்களிடம் இதைப் பற்றிக் கொண்டு போகவே இதை எழுது கிறேன்,பதிவு செய்கிறேன்.நிறைய கதைகளைத் தேடித் தேடி அலைந்தேன். எனக்கு பல அரிய படாத தகவல்கள் கிடைத்தது.என்னுடைய தேடல் மிகவும் சிலிர்ப்பாக இருந்தது. இன்று இந்த புதுக்கோட்டையில் முக்கியமாக இந்த இசைக் கல்வெட்டு அடையாளப்படுத் தும் புதையல்களின் கூடாரமாக இருக்கிறது. அப்படி, இங்கிருக்கும் மக்களோடு நிறைய உரையாடினேன்.இதை, அடுத்தத் தலைமுறைக்கு பகிர்ந்துக் கொள்ளும் நோக்கத்தில் தான் எழுது கிறேன்.இதை வாசிக்கும் ஒவ்வொரு வரின் ஆர்வத்தைப் பொறுத்து அவர்கள் தெரிந்துக் கொள்ளக்கூடிய தகவல்கள் மாறுபடும்.வரலாற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ள,எனது இந்த கட்டுரை வழிகாட்டியாக விளங்கும் என நம்புகிறேன். இன்று,இணையதளத்தில் நமக்குக் கிடைக்காதத் தகவல்களே இல்லை.எனினும்,நான் என்னுடைய அனுபவத்தைப் பற்றியும்,முக்கியமாக இந்த “இசைக் கல்வெட்டு “ வரலாற்றில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றக் காரணத்தினால்,இதைப்பற்றி நான் நிறையத் தெரிந்துக் கொண்டாலும், நான் இவற்றையெல்லாம் நேரில் கண்ட பிறகே எனக்கு நம்பிக்கை அதிகமானது.எனவே, இந்தவர லாற்றின் தகவல்களை நேரடியாக மக்க ளிடம் சேர்ப்பது எனது மிகப்பெரிய பொறுப்பாக கருதுகிறேன்.