மெக்சிகோ சிட்டி, மார்ச் 16- லத்தீன் அமெரிக்க நாடுக ளும், கரீபிய நாடுகளும் இணைந்து நின்று சவால்களை சந்திக்க வேண்டும் என்று மெக்சிகோவின் ஜனாதிபதி லோபஸ் ஓப்ரடார் விருப்பம் தெரிவித்துள்ளார். பெரும் அளவில் இயற்கை வளங்களைக் கொண்டிருந்தா லும், பன்னாட்டுப் பெரு நிறுவ னங்களே அவற்றை ஆக்கிரமித்து வந்தன. இத்தகைய கொடுமைக ளில் இருந்து மீள தங்களுக்குள் ஒற்றுமை வேண்டும் என்று தொ டர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பிரேசிலில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் முக்கியமா னதாக மாறியுள்ளது. அதில் இடது சாரி வேட்பாளரான லூலா டிசில்வா வெறிறி பெற்றால் ஒற்றுமை வலுப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அர்ஜெண்டி னாவின் ஜனாதிபதி ஆல்பெர்ட் டோ பெர்னாண்டஸ், மெக்சிகோ ஜனாதிபதி ஓப்ரடாருக்கு இது குறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். லூலா டி சில்வா வெற்றி பெற்றால் மெக்சிகோ, பிரேசில் மற்றும் அர் ஜெண்டினா ஆகிய மூன்று நாடுக ளும் ஒன்றிணைந்து ஒட்டு மொத்த பிராந்தியத்தையே இணைக்க முடியும். ஒரு தரமான, மேம்பட்ட ஜனநாயகத்தை இந்தப் பகுதியில் ஏற்படுத்தலாம் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கடிதத்தில் உள்ள விப ரங்களை வரவேற்றுள்ள ஓப்ரடார், லத்தீன் அமெரிக்கப் பகுதியில் பொருளாதார மற்றும் வணிக ரீதியில் நிறைய சாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பது வர லாற்றுக் கட்டாயமாகும். அதே வேளையில் கரீபிய நாடுகளையும் இந்தக் கூட்டில் இணைத்திட வேண்டும். இதன் மூலம் நேர்மை யான வருமானப் பங்கீடு அளிக்கும் சமூகத்தை உருவாக்கிடலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், “ஐரோப் பிய யூனியன் எப்படி ஒரு கூட்டு என்ற அடையாளத்தைப் பெற்றி ருக்கிறதோ, அதே போன்று லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடு களின் கூட்டும் இருக்க முடியும். மத்திய அமெரிக்க நாடுகளை நாம் ஆதரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அர்ஜெண்டினா ஜனாதி பதியின் கடிதம் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அவர் மிகவும் நேர்மையானவர். ஒரு அரசியல் கொள்கையை வெளியிடுவது போன்று அவரது கடிதம் இருக்கி றது” என்று தெரிவித்தார்.