சென்னை,அக்.16 நல்ல உடற்பயிற்சியானது உடலையும் மனதையும் கூர்மையாக வைத்திருக்கும் என்று சர்வதேச ஓட்டப்பந்தய முன்னாள் வீராங்கனையும் ஒன்றிய அரசு அதிகாரி யுமான ஷைனி வில்சன் கூறினார், பிஐஎஸ் எனப்படும் ஒன்றிய அரசின் இந்திய தர நிர்ணய அமைப்பின் 75-ஆம் ஆண்டு மற்றும் உலக தரநிலைகள் நாளை முன்னிட்டு சென்னையில் ஏற்பாடு செய்யப்ப ட்டிருந்த நடைபயணத்தில் கலந்துகொண்டு அவர் பேசுகையில் இதனைத் தெரி வித்தார். ஒத்த கருத்து கொண்டவர்களை ஒன்றி ணைக்கவும், பிரச்சினைகள் மற்றும் காரணங்கள் பற்றிய அறிவைப் பரப்பவும்; இது போன்ற சிறு நடை - ஓட்டம் ஒரு நல்ல கருவியாக அமைகிறது என்றார். தவறா மல் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கி யமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பிஐஎஸ் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள அதன் தென் மண்டல அலுவலகம் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் மற்றும் ஹால் மார்க்கிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடை பயணத்தை நடத்தியாக பிஐஎஸ் துணை தலைமை இயக்குநர் யாதவ் கூறினார். பொருட்கள் மற்றும் சேவைகளின் தரங்களை உறுதிப்படுத்தும் தயாரிப்புச் சான்றிதழ் (ஐஎஸ்ஐ மார்க் - பிஐஎஸ் முத்திரை), கட்டாயப் பதிவுத் திட்டம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் ஹால்மார்க்கிங் போன்ற பல்வேறு தரநிலை களைப் பற்றி, நுகர்வோர் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.