tamilnadu

img

உழைப்பாளி மக்கள் மீது தொடுக்கும் தாக்குதல்

புதுச்சேரி,அக்.1- இந்திய உழைப்பாளிகள் மீது தாக்குதல் தொடுக்கும்   ஆட்சியாளர்களை ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டு மென்று புதுச்சேரியில் நடந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் ஏ.கே.பத்மநாபன் அழைப்பு விடுத்தார். புதுச்சேரி  அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன முன்னாள் கவுரவத் தலைவர் சி.எச்.பாலமோகனனின் திருவுருவச்சிலை திறப்பு விழா  முல்லை நகரில் உள்ள அரசு  ஊழியர் சம்மேளன வளா கத்தில் நடைபெற்றது.  ஒன்றிய,  மாநில அரசு ஊழியர் ஒருங்கி ணைப்புக்குழு அமைப் பாளரும், விழாக்குழுத் தலை வருமான க.முருகன் தலைமை  தாங்கினார். இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) அகில  இந்திய துணைத் தலைவர்  ஏ.கே.பத்மநாபன் கலந்து  கொண்டு சி.எச்.பாலமோ கனின் மார்பளவு சிலையை திறந்து வைத்து பேசினார். ஏ.கே. பத்மநாபன் தனது  உரையில், “ நாட்டின் பொருளா தாரத்தை சீர்குலைக்க 1980இல் துவங்கப்பட்ட புதிய பொரு ளாதார கொள்கையின் பாதிப்பு இன்றைக்கு தீவிரமாக்கப்பட் டுள்ளது. அன்றைக்கு இந்த கொள்கையை ஆதரித்த வர்கள் நம்மோடு இணைந்து போராடும்  நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இது தான் வரலாறு நமக்கு சொல்லும் பாடம்” என்றார். 1982 ஆம் ஆண்டு ஜனவரி  19  நடைபெற்ற ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத் தில் 10 தோழர்கள் பலியானார் கள். அன்றைக்கு ஆட்சியாளர் களால் பழி வாங்கப்பட்டு, அடக்கு முறைகளை எதிர்க் கொண்டவர் தோழர் பால மோகனன் என்றும் புகழாரம் சூட்டினார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய ஆட்சி யாளர்களின் கொள்கையின் விளைவாக இன்றைக்கு புதுச்சேரி மக்களின் சொத்தாக விளங்கும் மின்துறையை தனியார்மயமாக்கிவிட்டனர். இதனை எதிர்த்து ஊழியர்கள், பொறியாளர்கள் என புதுச்சேரியில் உள்ள மற்றும் ஆளும் கட்சியை தவிர்த்து அனைத்து கட்சிகளும்  தற்போது  போராட்டத்தை துவக்கியுள்ளனர். இப்படி இந்திய மக்களுக்கு, உழைப் பாளிகளுக்கு  எதிரான கொள் கைகளை எதிர்த்து நின்ற  பாலமோகனன் ஆட்சியா ளர்களால் பழிவாங்கப்பட்டார். ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். பாலமோகனன் விட்டுசென்ற பணிகளை  இன்றைக்கு நாம் முன்னெடுக்க வேண்டிய காலத்தில் உள்ளோம். தொழிலாளர்கள் விவசாயிகள் பெண்கள், வாலிபர்கள் என  அனைவரும்  ஒன்று சேர்ந்து   ஆட்சியாளர்கள் உழைப் பாளிகள் மீது தொடுக்கும் தாக்குதலை முறியடிக்க வேண்டும் என்றும் பத்மநாபன் கேட்டுகொண்டார்.

பாலபாரதி

தோழர் சி.எச்.பாலமோகன் நினைவு வளாக பெயர் பலகை திறந்து வைத்து பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி,“தான் படிக்கும் பள்ளியில் பெண்க ளுக்கு கழிவறைகளை கட்டி கொடுக்க போராடினார் என்றால் அந்த மாணவ பருவத் திலேயே போராட்ட குணத்தை ஏற்படுத்தி கொண்ட வர் பாலமோகனன். அத்த கைய குணாம்சங்களை நமது பிள்ளைகளுக்கும் நாம் ஏற்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

நினைவு மலர்

விழாவில் சி.எச்.பால மோகனின் நினைவுமலரை ஒன்றிய அரசு ஊழியர்மகா சம்மேளனத்தின் தலைவர்கள் ஒருவரான எம்.துரை பாண்டியன் வெளியிட்டார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செல்வம், சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் நா.சண்மு கம், கவுரவத்தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச் சந்திரன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளா ளர் கிறிஸ்டோபர், பால மோகனின் குடும்பத்தார், நிர்வாகிகள் உட்பட திர ளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.
 

;