சென்னை, ஜூலை 3 - சனாதனத்திற்கு எதிரான தத்துவப் போரை அனைத்து தளங்களிலும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் அறைகூவல் விடுத்துள் ளார். கீழடியை மையப்படுத்தி எழுத்தா ளர் க.உதயசங்கர் எழுதிய ‘ஆத னின் பொம்மை’ என்ற சிறார் நாவ லுக்கு, சாகித்ய அகாதமியின் ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது அறி விக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ஞாயிறன்று (ஜூலை 2) சென்னை யில் க.உதயசங்கருக்கு ‘பாரதி புத்த காலயம்’ சார்பில் பாராட்டு விழா நடை பெற்றது. இந்நிகழ்வில் கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: எழுத்தாளர் உதயசங்கருக்கு நீண்ட காலத்திற்கு முன்பே கிடைத் திருக்க வேண்டிய அங்கீகாரம் காலம் கடந்து கிடைத்திருந்தாலும் மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளிப் பருவத்திலிருந்து எழுதி வருகிறார். சிறுகதைகள் மட்டு மின்றி அவர் எழுதிய ஆய்வு கட்டுரை கள் சமூகத்தின் ஆழமான உணர்வு களை புரிந்து கொள்ள உதவுகிறது.
நேர் முரண்
சிறார் இலக்கியம் ஏன் தேவைப்படு கிறது? அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஆழ்ந்து சிந்தித்து செயலாற்ற வேண்டும். பாஜக ஒன்றிய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, பெண்கள், குழந்தைகளிடத்திலும் வருணாசிரமத்தை, சனாதன தத்து வத்தை பரப்பி வருகிறது. அரசமைப்புச் சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தின சரி சனாதனத்திற்கு ஆதரவாக பேசு கிறார். “சனாதனம் இந்தியாவின் அடிப்படை தத்துவம், உலகை விரை வில் ஆட்சி செய்யும். சனாதனத்தில் தீண்டாமை இல்லை. வள்ளலார் சனாதனத்தின் உச்சம்” என்றெல்லாம் கூறுகிறார். தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக பாஜக-வால் ஆர்எஸ்எஸ் கொள்கை களை பரப்ப முடியவில்லை. எனவே, அதை ஆளுநர் ஆர்.என்.ரவி செய் கிறார். சமத்துவத்தை அடிப்படையாக கொண்ட ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்பதும், வேதத்தை அடிப்படையாக கொண்ட ‘சனாதனம்’ என்பதும் ஒன்றே என்கிறார். இந்த இரண்டுமே நேர் எதிரான தத்துவங் கள். இவை இரண்டையும் ஒன்றாக்கி மக்கள் ஏற்க வேண்டும் என்கிறார். சனாதனத்தில் பாகுபாடு இல்லை யென்றால் தீண்டாமை எப்படி வந்தது? பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது ஏன் நீடிக்கிறது? அரசிய லமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக சனாதனத்தை ஆளுநர் திணிக்கிறார். விஞ்ஞானக் கழகங்கள், அரசியல் அமைப்புகள், நீதிமன்றங்கள் சனா தனக் கோட்பாட்டை தூக்கிப்பிடிக்கின் றன. நீதிமன்றங்கள் அரசியல் சட்டத்திற்கு மாறாக தீர்ப்புகளை அளிக்கின்றன.
தத்துவப்போர்
சனாதனத்தை நிலைநாட்ட, சமூக நீதி, பன்முகத்தன்மை கோட்பாட்டை சிதைக்க இந்தியாவில் தத்துவப்போர் நடந்து கொண்டிருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கள் ஒன்று சேர்ந்து பாஜக-வை ஆட்சி அதிகாரத்திலிருந்து வீழ்த்துவோம். அதனால் ஆர்எஸ்எஸ் தத்துவம் வீழ்ந்து விட்டது என்று பொருள் அல்ல. சனாதனத்திற்கு எதிரான தத்துவப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்கு முன்னோடியாக தமிழ்மண் உள்ளது. யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்ற பகுத்தறிவு சிந்தனையை பரப்புவோம். ‘ஆனந்த வள்ளி’ நாவலில் மராட்டிய மன்னர்களின் ஆட்சி முறை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர், பல்லவர், முகலாயர், ஆங்கிலேயர் என பல ஆட்சிகள் நடந்திருக்கின்றன. ஆட்சி அதிகாரம் ஆளும் வர்க்கத்தின் சுகபோகங்களுக்கு சேவை செய்யவே பயன்பட்டுள்ளது.
தமிழ்ச்சமூகம் ஒரு போதும் அமைதியாக இருந்ததில்லை. மார்க்ஸ் குறிப்பிட்டபடி, வர்க்கப் போராட்டம் நீண்ட நெடுங்காலமாக நடந்து கொண்டே இருக்கிறது. சோழர் காலத்திலும் அது நிகழ்ந்தது. இந்த போராட்டத்தை முடக்க பிராமணி யத்தை கொண்டு வந்து, தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்ட னர். டெல்டாவில் பெரியபெரிய ஆல யங்கள் ஏன் உள்ளன? விவசாயி களின் எழுச்சியை பலத்தால் அடக்க முடியவில்லை. எனவே, சிந்தனையை அடக்க பிராமணியத்தை சோழர்கள் கொண்டு வந்தனர். பெரியார், சிங்காரவேலர் போன்ற பகுத்தறிவுவாதி கள் உருவாக்கிய வற்றை பாழ்படுத்துகிறார்கள். பாஜக விற்கு தமிழகத்தில் ஆளே இல்லை என்ற நிலை மாறி, அவர்களுக்கும் ஆட்கள் உள்ளார்கள் என்ற நிலையை உருவாக்குகின்றனர். தமிழ்ப் பண்பாட் டோடு ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை திணிக் கின்றனர். அவர்களது தளத்தை பலப்படுத்துவதை முறியடிக்க வேண்டும். அதற்கான போராட்டத்தை கருத்து தளத்தில் வலுவாக நடத்த வேண்டும். வடக்கே இருந்து வரலாறு எழுத வேண்டும் என்பதை மாற்றி தெற்கிலிருந்து எழுத வேண்டிய நிலை கீழடி அகழாய்வின் மூலம் உருவாகி உள்ளது. ‘ஆதனின் பொம்மை’ போன்று நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவர வேண்டும்.
‘தமிழ்நாடு அகாதமி’
சாகித்ய அகாதமி விருது அகில இந்திய அளவில் வழங்கப்படுகிறது. தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்குவதில்லை. எனவே, கேரள அரசை போன்று, தமிழ்நாடு அரசும் ‘தமிழ்நாடு அகாதமி’ விருது ஒன்றை உருவாக்க வேண்டும். தமிழக அரசு சில விருதுகளை வழங்குகிறது. இருப்பினும், நிரந்தர அமைப்பாக அகாதமி விருதை உருவாக்க வேண்டும். இதனால் படைப்பாளிகள் ஊக்கம் பெறுவார்கள். புதுப்புது படைப்பாளிகள் உருவாவார்கள். அவர்களது படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு துறையை உருவாக்க வேண்டும் என்று முத லமைச்சரிடம் கோரிக்கை வைத்துள் ளேன். எதிர்காலத்தில் அது நிறை வேறும். குழந்தைகளை சிந்திக்க வைக்க, நல்வழிப்படுத்த இலக்கியத்தில் மாற்று அரசியலை போதிக்கிற படைப்புகள் உருவாக வேண்டும். நடராஜன் எழுதிய ஆயிஷா என்ற கதையே அவரின் அடையாளமாக மாறி ஆயிஷா நட ராஜன் என அழைக்கப்படுகிறார். அத்த கைய படைப்புகள் உருவாகவேண்டும். தமுஎகச நிர்வாகியாக மட்டுமல்லா மல், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் உதயசங்கர் உள்ளார். இந்த அமைப்பு வெற்றிகரமான படைப்புகளை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்புரையாற்றிய க.உதயசங்கர், “43 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். 63ஆவது வயதில் இந்த விருது கிடைத்துள்ளது. ‘ஆயிஷா’ நூல் பெரும் புரட்சி. அதுதான் நவீன தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் மையப்புள்ளி. 2017இல் ஆனந்த விகடன் ‘மாயக்கண் ணாடி’ நூலுக்கு விருது வழங்கியது போன்று மிக முக்கியமானது இந்த பாலபுரஸ்கார் விருது. 151 நூல்களை எழுதியுள்ளேன். 10 வருடமாக சிறார் இலக்கியத்தில் பணியாற்றி வரு வதற்கு கிடைத்த வெகுமதியாக இந்த விருது உள்ளது. சிதறிக் கிடக்கும் சிறார் படைப்பாளிகளை சமூகம் சார்ந்து எழுத அணி திரட்டி வருகிறோம்” என்றார். இந்த நிகழ்வுக்கு ஆயிஷா நடராஜன் தலைமை தாங்கினார். தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ., சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் விழியன், யெஸ்.பாலபாரதி, விஷ்ணு புரம் சரவணன், ஆதி வள்ளியப்பன், மு.முருகேஷ், இனியன், பாரதி புத்தகாலயம் மேலாளர் க.நாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்வுகளை நர்மதா தேவி ஒருங்கிணைத்தார்.