விகடன் இணையதளம் முடக்கப்பட்டதை கண்டித்து செவ்வாயன்று (பிப்.18) சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சுரேஷ்நம்பத், குணசேகரன், கார்த்திகை செல்வன், ரம்யாகண்ணன், பிரஸ் கிளப் நிர்வாகிகள் சுரேஷ், ஆசிர், சென்னை பத்திரிகையாளர் சங்க பொதுச்செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.