tamilnadu

img

மாற்றத்தை தம்மிடம் இருந்து தொடங்கியவர் சங்கரய்யா

சென்னை, ஆக. 6 –  மாற்றத்தை தம்மிடம் இருந்து  தொடங்கியவர் என்.சங்கரய்யா  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்  குழு உறுப்பினர் ஜி.ராமகிருண் ணன் கூறினார்.   பத்திரிகையாளர் வே.பெரு மாள் எழுதிய ‘மிளகாய் குண்டுகள்   - சங்கராயணம்’ நூல் வெளியீட்டு விழா புதனன்று மயி லாப்பூர் பகுதியில் நடைபெற்றது. இந்நூலை ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட, வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.நிவேதா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ஜி.ராமகிருஷ் ணன் பேசியதன் சுருக்கம் வரு மாறு:

இந்நூலை பெருமாள் கட்சி யின் முழுநேர ஊழியர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.  கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பின ராவதே ஒருவருக்கு மிகப்பெரிய பொக்கிஷம் என்றார் ஜோசப் ஸ்டாலின். முழுநேர ஊழியர்  களை முழுநேர புரட்சியாளர்கள் என லெனின் வர்ணித்திருக்கிறார். அத்தகைய புரட்சியாளர்களில் ஒருவரான தோழர் சங்கரய்யா வின் வாழ்வில் நடைபெற்ற சம்ப வங்கள், வரலாற்றை நூலாசிரியர் கவிதையாக்கி உள்ளார். தோழர் சங்கரய்யாவின் 100வது பிறந்த நாளில் அவரை பெருமைப்படுத்த தமிழக அரசு,  ‘தகைசால் தமிழர்’ விருதுடன் 10 லட்சம் ரூபாய் வெகுமதி அளித் தது. அதனை கொரோனா பணி களுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திருப்பி  கொடுத்து விட்டார். விருது வழங்கி யதற்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்ற சிபிஎம் தலைவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், “சங்கரய்யாவிற்கு விருது கொடுத்து சிக்சர் அடித்த தாக நினைத்தேன். ஆனால், அந்த  தொகையை நிவாரண நிதிக்கு  கொடுத்து அவர் டபுள் சிக்சர்  அடித்து விட்டார்” என்று புளகாங்கி தத்தோடு தெரிவித்தார்.

விடுதலைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறை யில் இருந்தபோது சங்கரய்யா உள்ளிட்ட தோழர்கள், தங்களை  அரசியல் கைதிகளாக நடத்த  வேண்டும் என்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்கள். அந்த போராட்டத்  தின் 10வது நாளில் சங்கரய்யா ‘தாய்’ நாவல் படித்துக் கொண்டு இருந்தார்.  சங்கரய்யாவின் மன  உறுதியை கண்ட சிறை அதிகாரி  அதிர்ச்சி அடைந்தார்.  சங்கரய்யா வின் வரலாற்றை அறிந்த கலை ஞர் கருணாநிதி, தாய் நாவலை கவிதையாக படைத்தபோது, அந்நூலுக்கு சங்கரய்யாவை முன்  னுரை எழுதி வாங்கி பிரசுரித்தார். பகத்சிங் தூக்கிலிடப்படு வதற்கு முன்பாக கிளாரா ஜெட்  கின் தொகுத்த ‘லெனின் நினை வலைகள்’ என்ற நூலை படித்துக்  கொண்டிருந்தார். தனது சகாக்க ளுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் “அன்றாட நடைமுறை பணிகள், புரட்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் லெனினின் வாழ்க்கை மற்றும் அவரது படைப்புகளை படிக்க வேண்டும்”  என்று பகத்சிங் குறிப்பிட்டிருந் தார். அத்தகைய பகத்சிங்-கின்  தியாகம் இளைஞர்களை கொந்த ளிக்க வைத்தது. அந்நியர் ஆட் சிக்கு எதிரான போராட்டத்தை கலந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு சங்கரய்யாவிற்கும் ஏற்பட்டது.

நாம் விரும்பும் மாற்றத்தை நம்மிடம் இருந்து தொடங்க வேண்  டும் என்பதை நடைமுறைப்படுத் தியவர் சங்கரய்யா. சாதி வேறு பாட்டை களைய கலைஞர் சமத்து வபுரத்தை தொடங்கினார். சங் கரய்யா, தனது குடும்பத்தையே சமத்துவபுரமாக மாற்றினார். கோவையில் மதக்கலவரம் நடந்த போது சங்கரய்யா அறிக்கை விடுத்த சில நிமிடங்களில் தொடர்பு  கொண்ட கலைஞர், மார்க்சிஸ்ட்  கட்சியின் அணுகுமுறையின் அடிப் படையிலேயே அரசு அந்தப் பிரச்ச னையை கையாளும் என்றார். அத்தகைய தத்துவ, நடைமுறை தெளிவு கொண்டவர் சங்கரய்யா.

ஒரு மகத்தான தலைவரின் வாழ்க்கையை கவிதையாக்குவது சிரமமானது. அதை நூலாசிரியர் சிறப்பாக செய்துள்ளார். பாஜக இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றிட துடிக்கிறது. கார்ப்ப ரேட்டுகளுக்கு சலுகைகள் அளிக்  கும் ஒன்றிய அரசு, மக்களை வரி  போட்டு வஞ்சிக்கிறது. பாஜக அரசை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக போராடி வருகிறது. எழுத்தாளர்கள்  இத்தகைய சூழலை, போராட்டங்களை, இயக்கங்களை படைப்புகளாக கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கட்சியின் மயிலாப்பூர் பகுதிச்  செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கி யம், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.குமார், பத்திரிகையாளர் மயிலை பாலு, தமுஎகச மாநி லக்குழு உறுப்பினர் சி.எம்.குமார், சிபிஎம் கிளைச் செயலாளர் ஆர். ரமேஷ், எம்.ஆனந்தன் உள்ளிட் டார் கலந்து கொண்டனர்.

;