இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத் தில் வெளிவந்தது மாமனிதன் திரைப்படம். விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்திற்கு இளை யராஜாவும் யுவன் ஷங்கர்ராஜாவும் இணைந்து இசையமைத்திருந்தார்கள். பல்வேறு விருதுகளைப் பெற்ற இந்தப் படத்திற்கு மீண்டும் ஒரு சர்வதேச விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவில் நடந்த 29ஆவது செடோனா சர்வதேசத் திரைப்பட விழாவில் மாமனிதன் படம் மிகச் சிறந்த உத்வேகம் தரும் திரைப் படம் என்ற விருதினைப் பெற்றுள்ளது. மாமனிதனின் இயக்குநர் சீனு ராமசாமி விழாவில் பங்கேற்று விருதினைப் பெற்றுக் கொண்டார்.