tamilnadu

img

அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரையில் கலப்படமா?

சென்னை, டிச. 1- பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உடலுக்கு தீங்கு தரும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? ஆய்வில் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் பி.செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சந்தையில் கலப்பட வெல்லம் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ள நிலையில் வெல்லம் மற்றும் அவை சார்ந்த பொருட்களில் கலப்படம் செய்வதை தடுப்பதற்கான மாநில அளவிலான குழு கூட்டம் நடைபெற்றதாகவும் அந்தக் கூட்டத்தில் வெல்லம், பனை வெல்லம், நாட்டு சக்கரை, அச்சு வெல்லம் உள்ளிட்டவை தயாரிக்கும் போது பொதுவாக அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும் நிலையில் அவற்றின் கலருக்காக மைதா, சர்க்கரை, சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட், கால்சியம் கார்பனேட் செயற்கை நிறமூட்டிகள், சோடியம் ஹைட்ரோ சூபேட் போன்ற ரசாயனங்கள் கலப்படம் செய்யப்பட்டு வெல்லமானது மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறங்களில் இருக்கும் என பொதுமக்கள் மத்தியில் தவறாக பரப்பப்படுகிறது. இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் வெள்ளம், பனை வெல்லம், அச்சு வெல்லம் உள்ளிட்டவை தயாரிக்கக்கூடிய ஆலைகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு கலப்படம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உற்பத்தி நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;