tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு மொழியை திணிக்க ஒன்றிய அரசு முயலுவதை ஏற்க முடியாது. அரசியல் ஆதாயம் என வந்தால் மட்டும் தமிழ் மற்றும் தமிழ் பண்பாடு என புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் யதார்த்தத்தில் அவர்கள் தமிழுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ்

நான் மதத்திற்கு எதிரானவன் அல்ல. அது தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயம். எனினும் நான் அதில் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், அரசியல் ஆதாயத்திற்காக மத நிகழ்வுகளைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

விவிஐபி நண்பர்கள் கும்பமேளாவில் கலந்துகொள்ள அரசர் அனுமதிக்கிறார். ஆனால் சாமானியர்களை நெரிசலில் கொல்லப்பட விடுகிறார். நண்பர்களை ஹெலிகாப்டரில் கும்பமேளாவுக்கு அழைத்து செல்கிறார். மறுபக்கம் ரயில்களுக்காக சாமானியர்களை தவிக்க விடுகிறார். அமெரிக்காவில் நண்பரை காப்பாற்ற வாதிடுகிறார். அதே அரசர் மக்களின் கை கால்களில் விலங்கு பூட்டப்படும்போது அமைதியாக இருக்கிறார்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன்

தமிழ் மாவட்ட மொழி அல்ல... மாநில மொழி அல்ல... ஒரு நாகரிகத்தின் மொழி ஆகும். நாகரிகம் உள்ளவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழியின் சிறப்பு புரியும்.