tamilnadu

img

முதல் கட்டமாக ரூ.2 லட்சம் மாநாட்டு நிதி வழங்கப்பட்டது

முதல் கட்டமாக ரூ.2 லட்சம் மாநாட்டு நிதி வழங்கப்பட்டது 

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு மது ரையில் ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை நடை பெற உள்ளது. இந்த மாநா ட்டிற்கான கரூர் மாவட்ட வரவேற்பு குழு கூட்டம், கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு கட்சி யின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஜீவானந்தம் வரவேற்பு உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ. 2 லட்சத்தை பெற்றுக் கொண்டு, மாநாட்டு வேலைகள் மற் றும் அதன் நோக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராஜூ, கே.சக்திவேல், சி.முரு கேசன், இரா.முத்துச்செ ல்வன், பி.ராமமூர்த்தி, சி.ஆர்.ராஜாமுகமது மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்ட வரவேற்பு க்குழு தலைவராக ஜி.ஜீவா னந்தம்,  செயலாளராக மா. ஜோதிபாசு, பொருளாளராக பி.ராமமூர்த்தி, துணைத் தலைவர்களாக சி.முரு கேசன், இரா.முத்துச்செல்வன், வக்கீல் சரவணன், கணேசன், எம். சுப்பிரமணியன், துணைச் செயலாளர்களாக பி.ராஜூ, எம். தண்டபாணி,  கே.சக்தி வேல், எம். ராஜேந்திரன், எம் .சிவா, வரவேற்பு குழு  உறுப்பினர்களாக அனைத்து மாவட்டக்குழு உறுப்பினர்கள்,  வெகுஜன அமைப்பு தலைவர்களை உள்ளடக்கிய 50 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்டத் தில் 200 இடங்களில் சுவர் விளம்பரம், 100 பேர் கொண்ட செந்தொண்டர் அணி மற்றும் மாநாட்டு நிறைவு நாளன்று பேரணி யில் 2,000 பேர் கரூரி லிருந்து கலந்து கொள்வது என முடிவுகள் எடுக்கப் பட்டது.