பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும் என்பர். ஆனால், இங்கு பூவோடு (தாமரை) சேர்ந்ததால் நாறுவதாக பாமகவினர் வெளிப்படையாக பேசும் சமூக வலைத்தள பதிவுகள் அக்கட்சித் தலைவர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பாமகவிற்கும், பாஜகவிற்கும் கூட்டணியை அதன் தலைவர்கள் ஏற்றுக்கொண்டதைப்போல தொண்டர்கள் ஏற்கவில்லை. பொதுவாகவே, மருத்துவர் ராம தாஸ் எடுக்கும் முடிவுகளுக்கு அக்கட்சியினர் எந்த எதிர்ப்பை யும் தெரிவிக்காமல், பணியாற்று வார்கள் என்கிற வரலாறு முன்பு இருந்தது. ஆனால் இப்போது, சுயலாபத்திற்காக கட்சியை, தொண்டர்களை அடமானம் வைத்துவிட்டதாக பாமகவிற்குள் புகைச்சல் எழுந்துள்ளது. இக்கட்சியினர் பேசும் ஆடி யோக்கள் சமூக வலைத்தளங் களில் வைரலாகி வருகிறது. “பாட்டாளி மக்கள் கட்சியை பாழுங் கிணத்துல தள்ளிட்டாங்க. எத்த னை போராட்டங்கள், எவ்வளவு தடியடிகள், கோர்ட்டு, கேஸு, ஜெயி லுன்னு அலைஞ்சி வாழ்க்கையை தொலைச்சு கட்சியை வளர்த் தோம், எல்லார் எதிர்பார்ப்புகளை யும் மண் அள்ளி போட்டு கதைய முடிச்சுட்டாங்க..” “பாவம் டாக்டர் ஐயா என்ன செய்வாரு..? பிள்ளைக்கு துணை போறாரு..’’, “அட நீ போய்யா! ஓட்டை விட இவங்களுக்கு நோட்டு தான் முக்கியமா போச்சு” “சின்னமா..! அதான் இப்ப அழுகிப் போச்சே..” “மஞ்சள் துண்டை தோளில் போட்டு நடந்தால் ஒரு காலத்துல கெத்து! இப்பவோ அசிங்கமா பார்க்கறாங்க! “என்னங்க, நல்ல பெரிய பெட்டியா வாங்கிட்டிங்களா” ன்னு நக்கல் பண்றாங்க..!” முன்னல்லாம் ஐயா ஓட்டுக் கேட்டு வரும் போது ஊரே திரண்டு ஆரத்தி எடுப்பதென்ன..? குழந்தையை தூக்கி கொடுத்து பேர் வைக்க சொல்வது என்னா? மாலை, துண்டுன்னு மரியாதை கள் எவ்வளவு..? இப்ப யாரும் வீட்டை திறந்து எட்டிக் கூட பார்க்க மட்டாங்க! வருவது தெரிஞ்சாலே எஸ்கேப் ஆயிடுவாங்க.. வெறும் தெருவைத் தான் பார்க்கப் போறாரு..’’ - இப்படியாக பல பதிவுகள் உலவுகின்றன. எல்லாம், அவர்களது கட்சிக்காரர்கள் தான். “தாமரைப் பூவோடு சேர்ந்த தால் நாரும் நாறும்” என்கிற புது மொழி இப்போது புழக்கத்திற்கு வந்துள்ளது.
- பிரபாகரன்