“ஏதோ ‘நீட்’ தேர்வில் இப்போதுதான் குளறுபடி நடந்ததைப் போல பலர் பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். ‘நீட்’ பரீட்சையை எப்போது அறிமுகம் செய்தார்களோ, அன்று முதல் முறைகேடுகள் நடந்தபடிதான் உள்ளன. பள்ளிக் கல்வி நடத்துகின்ற தேர்வில் கருணை மதிப்பெண் கொடுப்பதும், சலுகை அடிப்படையில் மதிப்பெண் தருவதும் தவறு என்றுதான் நீட் வந்தது. இப்போது இவர்களே கொடுத்துள்ளார். அப்படி என்றால், இது மட்டும் எப்படி தரமான பரீட்சையாக இருக்க முடியும்?” என்று கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்பியுள்ளார்.