tamilnadu

img

விளையாடுவதை குறைத்துவிட்டதால் மருத்துவமனைகள் அதிகரித்துள்ளன

விளையாட்டு கட்டமைப்பு வசதி மற்றும் உபகரணங்களில் தொய்வு இருக்கக் கூடாது, தகுதி அடிப்படையில் வீரர்கள்  தேர்வு இருக்க வேண்டுமே தவிர பரிந்துரையை ஏற்கக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் பேச்சு திருவண்ணாமலை, அக்.16- விளையாடுவதை குறைத்துவிட்ட தால் மருத்துவமனைகள் அதிகரித் துள்ளன.ஒரு மருத்துவமனையை மூடுவதற்கு ஒரு விளையாட்டு மைதா னம் இருந்தால் போதும் என்று அமைச்சர் மெய்யநாதன் பேசினார். திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் 36-வது  மாநில இளையோர் தடகள போட்டி துவக்க விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் அக்டோபர் 16 அன்று நடை பெற்றது.  போட்டியை தொடங்கி வைத்து தமி ழக இளைஞர் நலன்- விளையாட்டு மேம்  பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் உரையாற்றினார். அவர் பேசுகையில், பதக்கம் பெறு வதற்காக மட்டும், விளையாடக்கூடாது. உடல் உறுதிக்காகவும் விளையாட வேண்  டும். நாட்டில் வீதிகள் தோறும் மருத்துவ மனைகள் உள்ளன. கடந்த காலங்களில் மருத்துவமனைகள் இல்லை. வீதிகள் தோறும் விளையாட்டு மைதானங்கள் இருந்தன. அனைத்து ஊர்கள் மற்றும்  கிராமங்களிலும் ஏதாவது ஒரு விளை யாட்டை விளையாடினோம். விளையாடு வது குறைந்துவிட்டதால், மருத்துவ மனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்  ளன. அதேநேரத்தில் மருத்துவர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் படித்தவர்கள் உடற்பயிற்சி செய்கின்றனர், விளை யாடுகின்றனர். ஒரு ஊரில் ஒரு மருத்துவ மனையை மூட வேண்டும் என்றால், அந்த ஊரில் ஒரு விளையாட்டு மைதா னம் இருந்தால் போதும். விளையாட்டு கட்டமைப்பு வசதி மற்  றும் உபகரணங்களில் தொய்வு இருக்கக்  கூடாது, தகுதி அடிப்படையில் வீரர்கள்  தேர்வு இருக்க வேண்டுமே தவிர பரிந்து ரையை ஏற்கக்கூடாது என 2 நேர்மை யான செயல்களை கடைபிடிக்க வேண் டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.திருவண்ணாமலை மாவட்ட விளை யாட்டு அரங்குக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர  நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர முதல்வர்  மு.க.ஸ்டாலின் தயாராக உள்ளார். இந்தி யாவின் விளையாட்டு தலைநகரமாக சென்னை மாற வேண்டும் என்ற முதல்வ ரின் கணவை நோக்கி நாம் பயணிப் போம் என்று தெரிவித்தார்.

;