மார்ச் 1-இல் கனமழை எச்சரிக்கை!
12 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு கடிதம்
கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மார்ச் 3 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும். அதேநேரத்தில், மார்ச் 1 அன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் தென்காசி, தூத்துக்குடி, திரு நெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களுக் கான கனமழை எச்சரிக்கை தொடர்பாக 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடி தம் அனுப்பி உள்ளது. கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.