tamilnadu

img

நோய் தீர்க்கும் தேன் குட எறும்புகள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

ஆஸ்திரேலிய எறும்புகளால் உண்டாக் கப்படும் தேன் மிகச்சிறந்த பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்புப் பொருட்களை கொண்  டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய மக்க ளின் அறிவை பயன்படுத்தி இதன் மூலம் பாக்டீ ரியா, பூஞ்சைத் தொற்றுகளுக்கு எதிரான புதிய  சிகிச்சைமுறையை உருவாக்கமுடியும் என்று  ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சளி, தொண்டைப்  புண் போன்றவற்றிற்கு பாரம்பரிய மருந்தாக வும் புதர் உணவாகவும் ஆஸ்திரேலிய ஆதிவாசி மக்கள் இதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

தேன் குட எறும்புகள்

இவற்றின் பொதுப் பெயர் தேன் குட எறும்பு கள். அறிவியல் பெயர் கேம்பனாட்டஸ் இன்ஃப்ளாட்டஸ் (Camponotus inflatus). இவை மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வட எல்லை  மாகாண பாலைவனப்பகுதிகளில் வாழ்கின்றன. இதில் ரிப்ளீட்ஸ் (Repletes) எனப்படும் சிறப்பு  வேலைக்கார எறும்புகள் மற்ற எறும்புகளின் தேனை அதிகமாக உறிஞ்சி எடுத்து தேன்  கொழுப்பை உற்பத்தி செய்து வயிற்றுப்பகுதி யில் சிறிய மரப்பிசின் போன்ற பொருளாக மாற்று கின்றன. காலப்போக்கில் இது பொன்னிற கல் போன்ற  ஒன்றாக மாறுகிறது. இதற்காக இவை தங்கள் உடலை உயிருள்ள சரக்கு அறைகளாக மாற்றிக்  கொள்கின்றன. வாழ்வை தியாகம் செய்கின்றன. உணவு பற்றாக்குறையாக இருக்கும்போது இவை மீள் தூண்டல் முறையில் சேகரித்த தேனை  வலையின் மேற்கூரையில் இருந்து தொங்கியபடி வெளிவிடுகின்றன. கோல்டன் ஸ்டாஃப் ( golden staph) என்று  பொதுவாக அழைக்கப்படும் ஸ்டாஃப்ஃபிலா காக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus)  என்ற பாக்டீரியாவுக்கு எதிராக இது சிறந்த முறையில் செயல்படுகிறது என்று தேனை பகுப்பாய்வு செய்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த எறும்புத்தேன் நியூசிலாந்தில் சர்க்க ரைக்கு மாற்றாக பயன்படும் மல்கா (mulga) மரங்களில் இருந்து தேனீக்களால் உற்பத்தி செய்  யப்படும் மேனுகா (manuka), ஸ்பெயின், போர்ச்சு கல், துருக்கி நாடுகளில் உள்ள தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் நிற ஜெரா (jarrah) தேனுக்கு சமமான மருத்துவ குணங்களை  பெற்றுள்ளது.


இந்த எறும்புத்தேன் ஒரு சில குறிப்பிட்ட நோய்க்கிருமிகளுக்கு எதிராக மட்டுமே சிறந்த முறையில் செயல்படுவது இன்னமும் புதிராக  உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அஸ்பெர்கிலஸ் (Aspergillus) மற்றும் கிர்ப்ட்டோகாகஸ் (Cryptococcus) போன்ற கடின மான பூஞ்சை கிருமிகளை இது அழிக்கிறது. கிர்ப்ட்டோகாகஸ் மரங்களில் வாழ்கிறது. அஸ்பெர்கிலஸ் சூடான, வறண்ட, தரிசான பாலைவன மண்ணில் வாழ்கிறது. இதனால் இந்த கிருமிகளை வேலைக்கார எறும்புகள் தங்கள் வாழிடங்களில் எதிர்கொள்  கின்றன. இது அவற்றிற்கு எதிர்ப்பாற்றலைப் பெற உதவுகிறது.” என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் கென்யா ஃபெர்னாண்டஸ் (Dr Kenya Fernandes) கூறுகிறார். பாரம்பரி யமாக இந்த எறும்புகளின் எண்ணிக்கை குறை யாமலிருக்க ஒரு வலையின் ஒன்றிரண்டு அறை களில் இருந்தே அவை சேகரிக்கப்படுகின்றன.

மருந்தாகும் எறும்புத் தேன்

மேனுகா தேன் போல் இல்லாமல் இந்தத் தேன் நுண்ணுயிரிகளுக்கு எதிராக புதிய செயல்முறையில் வேலை செய்கிறது. இதில் மெத்தல்க்ளியாக்சல் (Methylglyoxal) என்ற  கூட்டுப்பொருள் உள்ளது. ஜெரா தேன் ஹைடி ரஜன் பெர் ஆக்சைடின் மூலம் செயல்படுகிறது. தனித்துவம் மிக்க எறும்புத்தேனின் நோய் எதிர்ப்பு  சக்தி அவற்றில் உள்ள நுண்ணுயிரி எதிர்ப்பு பெப்டைடின் ((Peptide)மூலம் பெற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வாழ்வை ஆபத்தாக்கும் விதத்தில் மனிதத் தோலில் மோசமான தொற்றை ஏற்படுத்தக்கூடிய கோல்டன் ஸ்டாஃப்ஃபிற்கு எதிரான பண்பு இந்த  எறும்புகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது என்று தெரிய வில்லை. இந்த தேன் மதிப்புமிக்க வளம். ஆதி வாசி மக்களின் கலாச்சார சிறப்பு அடையாளம்  என்பதால் இதை நேரடியாக சேகரித்து கிளினிக்கல்  ஆய்வுகளுக்கு பயன்படுத்தமுடியாது. இந்த தேனில் இருக்கும் எதிர் நுண்ணுயிரி சிகிச்சைக்கு உதவும் வேறு புதிய கூட்டுப்பொருட்கள் பற்றி ஆய்வுகள் நடைபெறுகின்றன. “மேற்கித்திய சிகிச்சைமுறை பாரம்பரிய சிகிச்சைகளுடன் கை கோர்த்து செயல்படத் தொடங்கியுள்ளது. பாரம்பரியமாக பெண்கள் மட்டுமே எறும்புகளைத் தோண்டி எடுப்பார்கள். தொண்டைப்புண், புண்களுக்கு மேல் தடவும் மருந்தாக இதை பயன்படுத்தலாம். இந்த எறும்புத்தேன் மேப்பிள் சிரஃப் போல சீரான, அடர்வு குறைவான, தேனீ சேகரிக்கும் தேனை  விட அடர்த்தி அதிகமான, லேசான கசப்புச்சுவை யுடன் இருக்கும். இந்த தேனின் இனிப்புச்சுவையை பெற இதை ஈரமான வெண்ணை மற்றும் பாதாம் பழச்சாற்று டன் சேர்த்து சாப்பிடவேண்டும்” என்று தாய் எடி  அல்ரிச் (Edie Ulrich) மற்றும் அத்தை மார்ஜரி ஸ்டஃப்ஸ் (Marjorie Stubbs) ஆகியோருடன் இணைந்து கோல்டு ஃபீல்டு தேன் எறும்பு சுற்று லாவை நடத்திவருபவரும் டீ ஜூபன் மொழிக்குழு வின் (Tjupan language group) டானி அல்ரிச் (Danny Ulrich) கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக்  கட்டுரை பியர் (journal Peer) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.