tamilnadu

img

“சிற்பி” திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை,செப்.14- சிறார் குற்றங்களுக்குத் தீர்வு காணும், பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் “சிற்பி” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர்அரங்கில் புதனன்று (செப்.14) தொடங்கி வைத்தார். அப்பேது பேசியஅவர், “காவல்துறையை மக்களின் நண்பன்  என்று கூறுகிறோம். அதற்கேற்ப மக்கள் அனைவரும் காவல்துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். என்னுடைய எண்ணம் மட்டுமல்ல எல்லோருடைய எண்ணமும் அப்படி யாகத்தான் இருக்கும்” என்றார். சிற்பி என்ற இந்த திட்டம் சுமார்  4 கோடியே 25 லட்ச ரூபாய் செலவில்  செயல்படுத்தப்படவுள்ளது. சிறுவர் களை இளமைக் காலம் முதலே பொது  ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூக  பொறுப்புள்ளவர்களாகவும் உரு வாக்க பயன்படும் என்பதில் எவ்வித  ஐயமும் இல்லை என்றும் முதலமைச் சர் கூறினார். சிறார் குற்றங்களைக் கட்டுப் படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு கவனம் செலுத்திக் கொண்டி ருக்கிறது. சிறார்கள் குற்றங்களில் ஈடு பட குடும்ப உறுப்பினர்களின் கவனக் குறைவு, போதிய வருமானம் இல் லாமை, ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவை பெரும்பாலும் காரண மாக அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ. இறை யன்பு மற்றும் துறை உயர் அதிகாரி கள் கலந்துகொண்டனர். திட்டம் எப்படி செயல்படும்? முதற்கட்டமாக 100 அரசுப் பள்ளி களில் 8 ஆம் வகுப்பு பயிலும் 50 மாண வர்கள் விருப்பத்தின்பேரில் தன்னார் வலர்களாக தேர்வு செய்யப்படு வார்கள். இவர்களுக்கு நற்பண்புகள் மற்றும் உடற்பயிற்சி குறித்த வகுப்பு கள் நடத்தப்படும். இவர்கள் 8 சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப் பட்டு கல்வி, வரலாறு, பொது அறிவு குறித்து எடுத்துரைக்கப்படும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்  கொள்வதற்காக, விளையாட்டுப் பயிற்சி, உடற்பயிற்சி, கவாத்து ஆகிய வையும் கற்றுக் கொடுக்கப்படும். நல்லொழுக்கம், நாட்டுப்பற்று, தேசிய ஒற்றுமை, பிறருக்கு உதவுதல், தாம் கற்ற கல்வியையும், கண்டு களித்த வர லாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும்  நல்ல அனுபவங்கள் குறித்து பிற ருக்கு கற்றுத் தருதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க இச்சிறப்பு வகுப்புகள் உதவும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்க ளுக்கு, பொதுமக்கள் அமைதியாக வாழ்வதற்கு உறுதுணையாக இருக் கும் காவல்துறையின் செயல்பாடுகள், அமைப்பு, பணிகள் குறித்தும், அவசர உதவி மையங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும், சென்னை பெருநகர காவல் துறையின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும். இவ்வகுப்புகள் மூலம் அவர்களை  சிற்பியாக உருவாக்கி, இந்த சிற்பிகள்  மூலம் அப்பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் நற்பண்புகள் கற்பிக்கப்பட்டு, கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என அனைத்திலும் சிறந்த  மாணவர்களாக உருவாக்கப்படும்.

;