காஞ்சிபுரம்,ஜூலை 22- காஞ்சிபுரத்தில் போலி பட்டு சேலைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்படும் என்று அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்தார். காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவில், ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் புதிய விற்பனை நிலையம் கட்டப்பட்டது. இதை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் காந்தி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் தான் உண் மையான கைத்தறி சேலைகள். இந்த பட்டு களில் தான் தங்கத்தின் அளவு, வெள்ளி அளவு ஆகியவற்றுக்கு சான்றிதழ் வழங்கப்படும். கோ-ஆப்-டெக்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி நட்டத்தில் இயங்கி வந்தது. தற்போது ரூ.9 கோடி லாபத்தை ஈட்டியிருக்கிறது. கூட்டுறவு பட்டு சங்கங்கள் மூலம் வருவாய் களை அதிகரிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. ரூ.150 கோடியாக இருந்த விற்பனை ரூ.200 கோடியாக உயர்த்தினோம். இந்த ஆண்டு ரூ.400 கோடி இலக்கு வைத்துள் ளோம். இதை நாங்கள் ரூ.1000 கோடியாக அதிகரிப்போம். காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் விற்பனை ரூ.10 கோடியில் இருந்து ரூ.13 கோடியாக அதிகரித்துள்ளது. நலிவடைந்த சங்கங்களுக்கு முதலீடுகள் கொடுத்து தொடர்ந்து அதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மக்களுக்கு உண்மையான பட்டு எது? என்று தெரியவில்லை.போலிகளை தடுக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் போலி பட்டுகள் குறித்த விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அனைத்து கூட்டுறவு கடைகளில், இதுகுறித்து தகவல்கள் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.