சென்னை,டிச.19- பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட தேர்தல் காலத்தின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. சென்னையில் டிச.18.19 தேதிகளில் நடைபெற்ற சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் இதுகுறித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு; தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள நான்கரை லட்சத்துக் கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அதிமுக அரசு பிறப்பித்த ஆதிசேஷைய்யா தலைமை யிலான பணியாளர் சீரமைப்பு குழுவினை முற்றிலுமாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், அரசுத் துறை களில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தமிழக அரசின் புள்ளிவிவரங்களை முற்றிலுமாக தனியார்வசம் ஒப்படைக்கும் இந்த ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தினை கைவிட வேண்டும்.
சத்துணவு
சத்துணவு மைய அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செய லாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், சமூகவனப் பாதுகாவலர்கள், வேளாண்மைத் துறையில் பணி புரியும் பண்ணை ஊழியர்கள் போன்ற பல்வேறு நிலைகளில் பணியமர்த்தப் படும் அனைத்து நிலை ஊழியர்களுக் கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். எந்தவித காரணமுமின்றி பணிநீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்கள் கடுமையான போராட்டங்களின் காரணமாகவும் நீதிமன்ற உத்தரவின் மூலமாகவும் 41 மாத கால பணி நீக்கத்திற்கு பிறகு பணியமர்த்தப்பட்டனர். போராட்டக் காலத்தின்போது பலர் இறந்தும்விட்டனர். இறந்துபோன சாலைப் பணியாளர்களின் வாரிசுக ளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என வும், பணி நீக்கக் காலமான 41 மாத காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்தி அறிவிக்க வேண்டும்,
பெண் ஊழியர்களுக்கு தங்கும் விடுதிகள்
அலுவலகங்களில் மகளிருக்கென தனி ஓய்வறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும். அதேபோல் மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் செய்து தரவேண்டும், கணவன், மனைவி இருவரும் ஒரே ஊரில் பணிபுரியும் வகையில் ஏற்கனவே உள்ள ஆணையினை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையும் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கும் விதத்தில் மக ளிரை பணியிட இடமாற்றம் செய்யக் கூடாது. மாவட்டம்தோறும் பெண் ஊழியர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டப்பட வேண்டும். அரசு அலுவலக வளாகங்களில் குழந்தைகள் காப்பகமும் அமைக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக் கெதிரான பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க விசாகா கமிட்டி அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம்
27.1.2021ஆம் தேதி மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாட்டிலும், திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்தபடி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பலனளிக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்தவேண்டும். கொரோனா தொற்றால் உயிரி ழந்த முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அடிப் படையில் கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்க வேண்டும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், கடந்த 37 ஆண்டுகளாக லட்சக்கணக்கான ஊழி யர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.