திருவனந்தபுரம், டிச.19- பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகளை எதிர்த்துப் போரா டும் பெரும் சமூகப் பொறுப்பை கேரள அரசின் ‘நவகேரளம்’ நிறை வேற்றி வருகிறது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். ஒவ்வொரு பெண்ணும் தவறு களை எதிர்த்துப் பேசவும், தற் காத்துக் கொள்ளவும் வலிமை பெற வேண்டும். அதற்கு நமது பொது அறிவு மேம்பட வேண்டும். குடும்ப ஸ்திரியால் இதை மிகவும் திறம்பட சமாளிக்க முடியும். திருமண ஆலோ சனை கட்டத்தில் வரதட்சணை பற்றி பேசப்பட்டால், உடனடியாக தலை யிட முடியும். இந்த விழிப்புணர் வுப் பிரச்சாரம் தொடர வேண்டும். நாட்டின் நலனுக்காக நிற்கும் அனைவரும் அந்தப் போராட் டத்தில் கலந்துகொள்வார்கள். தீமைக்கு எதிரான போராட்டத்தில் அரசு எப்போதும் மக்களுடன் இருக் கும் என்று முதல்வர் கூறினார். திருவனந்தபுரம் நிஷாகந்தி அரங்கத்தில் குடும்ப ஸ்திரி மிஷன் ஏற்பாட்டில் ‘பெண்களோடு புதிய கேரளம்’ என்ற முழக்கத்தின் கீழ் வரதட்சணை மற்றும் பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான விரி வான பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்து பேசிய முதல்வர்,
இன்று நாம் காணும் கேரளம், சாதி வேறுபாடுகளைக் கடந்து புதிய மாற்றத்திற்கான மக்களின் நிலைப் பாட்டின் ஒரு பகுதியாக உருவாக் கப்பட்டது என்றார். ஒருங்கிணைந்த போராட்டத்தால் இது சாத்திய மானது. கல்வித்துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். கேரளாவில் ஆண், பெண் வேறுபாடின்றி அனை த்து குடும்பங்களின் குழந்தைக ளுக்கும் கல்வி வழங்கப்பட்டது. பெண்களை ஒடுக்கும் மனோபா வங்களுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் எழுந்தன. குழந் தைப் பருவம் மாறாமல் திருமணம் நடக்கும் நிலை முன்பு இருந்தது. தந்தையின் சொத்தில் மகள்களு க்கு உரிமை இல்லை. கல்வி மறுக் கப்பட்டது. இதற்கெல்லாம் எதி ரான போராட்டங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் எழுந்தன.
இவை அனைத்தின் விளைவாக சமூ கத்தில் முற்போக்கான மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் முதல்வர் கூறி னார். ஸ்த்ரிபக்ச நவகேரளம் பிரச்சா ரத்தின் தூதுவரும் நடிகையுமான நிமிஷா சஜயன் ஸ்த்ரிபக்ச நவகேர ளத்தின் உறுதி மொழியை வாசித் தார். இவ்விழாவில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந் தும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்ப ஸ்திரி பணியாளர்கள் கலந்து கொண்டனர். அனைத்து மாவட்ட மையங்கள், உள்ளாட்சி சுயாட்சி மையங்கள் மற்றும் 22,000 க்கும் மேற்பட்ட வார்டு மையங்களில் இணையான தொடக்க விழாக்க ளை ஏற்பாடு செய்து நவகேரளம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப் பட்டது. பெண்களின் புதிய கேரளத் துக்கான முதல் கட்ட பிரச்சாரம் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 வரை நடத்தப்படவுள்ளது.