சென்னை,ஜன.12- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான தோழர் ச.ஞானம் உடல் நலக்குறைவால் 11.1.22 செவ்வாயன்று மறைந்தார்.அவ ருக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ் மாநிலக்குழு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துள்ளது.அவரை இழந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளது. மாதர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச் செய லாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறியிருப்ப தாவது: தோழர் ஞானம் மாதர் சங்க மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராகவும், 9 ஆண்டுகாலம் செயல்பட்டவர்.தான் மட்டு மல்லாது தனது செயல்பாட்டினால் தன் குடும்பத்தினரையும் இயக்கத்தின் பால் ஈர்த்தவர். மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்கள் கே.பி.ஜானகியம்மாள், பாப்பா உமாநாத் ஆகியோருடன் இயக்கப்பணி களை செய்தவர். மதுரையில் பல பெண் களை ஊழியர்களாக உருவாக்கியவர். கே.பி.ஜானகியம்மாள் அறக்கட்ட ளையின் சார்பாக அண்ணாநகர் பகுதி யில் ரிக்ஷாத்தொழிலாளர்களின் குழந்தை களுக்கு மாலை நேர வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்து அதன் மூலம் பல ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தவர். 1990 களில் புதிய பொருளாதாரக் கொள்கையால் பெண்களும், உழைப் பாளிகளும் கடுமையான பாதிப்புக்குள்ளா கும் போது மதுரையில் உள்ள 15 பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைத்து மதுரை பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கி மாநிலத்திற்கு வழிகாட்டியவர் தோழர். ஞானம். அக்கூட்டமைப்பு இன்றளவும் பெண்கள் குழந்தைகள் மீதான சமூக, பொருளாதார தாக்குதல்களுக்கு எதிராக மதுரையில் போராட்டங்களை முன்னெடுக் கின்றது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ள னர்.
இறுதி நிகழ்ச்சி
தோழர் ச.ஞானம் அவர்களது உடல் இராமநாதபுரம் மாவட்டம் பேரையூரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா, பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநில துணைத்தலைவர் கே.பாலபாரதி, மாநில செயலாளர்கள் பொன்னுத்தாய், லட்சுமி, இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கண்ணகி, தலைவர் மாலதி, கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வி. காசிநாத துரை, மதுரை புறநகர் மாவட்ட க்குழு உறுப்பினர் இளங்கோவன், இராமநாதபுரம் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தோழர் ஞானம் மறைவுக்கு மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.