tamilnadu

img

ஆத்தூரில் அமையும் புதிய அரசுக் கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை

சின்னாளபட்டி, டிச.23-  திண்டுக்கல் மாவட்டம், ஆத் தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட சுதநாயகிபுரத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 7.73 ஏக்கர் பரப்பளவில் அமைக் கப்பட உள்ளது. கல்லூரி அமைக் கப்படவுள்ள இடத்தினை கூட்டு றவுத்துறை அமைச்சர் இ.பெரி யசாமி , தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்கு நரும், கூடுதல் பதிவாளருமான கோ.க.மாதவன் முன்னிலையில் டிசம்பர் 23 அன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அமைச்சர் பெரிய சாமி தெரிவித்ததாவது:  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரி அமைக்க அரசாணை பிறப்பிக் கப்பட்டுள்ளது. இந்தக்கல்லூரி யில் வரும் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறும்.

இந்த கல்லூரி தற்காலிகமாக ஜெயினி ஹெல்த் அண்ட் எஜுகேஷனல் சாரிடபிள் டிரஸ்ட் சார்ந்த கல்லூரி வளா கத்தில் உள்ள உபரி கட்டடங்க ளில் செயல்படும். கல்லூரியில் முதலாம் ஆண்டில் பி.ஏ.(கூட்டுறவு), பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ.(பொரு ளியல்) மற்றும் பி.ஏ.(அரசியல் அறிவியல்) ஆகிய பாடப்பிரிவு கள் தொடங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய கட்ட டத்தில் கல்லூரி இயங்கும்போது, கூட்டுறவு பயிற்சி உட்பட அனைத்துப் பாடப்பிரிவுகளும் தொடங்கப்படும்.  திண்டுக்கல் மாவட்டத்தில் 4 கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்துள்ளளனர். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் ஒட்டன்சத்திரம் சட்ட மன்ற தொகுதிக்கு ஒரு கல்லூரி யும், உயர்கல்வித்துறை சார்பில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கல்லூரியும் தொடங்க அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பழனியில் இந்து சம யம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் சித்தா கல்லூரி தொடங்க வும், கொடைக்கானலில் கூட்டு றவுத்துறை தொடர்பான பயிற்சி கல்லூரி அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் யூனியன் சேர்மன் மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ர மணி, தட்சிணாமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் சின்னாளப்பட்டி பேரூர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;