tamilnadu

img

விருதுநகரில் முதல் புத்தகத் திருவிழா

விருதுநகரில் முதல் புத்தகத் திருவிழா நவம்பர் 17 வியாழனன்று துவங்கியது. வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் , தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் வரவேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் வாழ்த்துரை வழங்கினார்.  தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன் (விருதுநகர்) , அசோகன் (சிவகாசி), தங்கப்பாண்டியன் (இராசபாளையம்) ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.