புதுதில்லி, டிச.2- நாடு முழுவதும் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஒழுங்கு படுத்தவும், மேற்பார்வையிடவும் வகை செய்யும் புதிய மசோதா நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இத்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களுக்கு தேசிய பதிவு ஆணை யம் அமைக்கவும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் இம்மசோதா வகை செய்கிறது. மசோதாவை தாக்கல் செய்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், “நாடு முழுவதும் ஏராளமான செயற்கை கருத்தரிப்பு மையங்கள், எவ்வித ஒழுங்கு விதிகளுக்கும் உட்படா மல் இயங்கி வருகின்றன. செயற்கை கருத்தரிப்புக்கு வரும் தம்பதிகளின் உடல்நிலையில் இது பெரும் தாக்க த்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இத்தகைய மசோதாவை கொண்டு வருவது அவசியம் ஆகிறது. இந்த மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப் பட்டது. நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்தது. ஒன்றிய அரசு அவற்றை பரிசீலித்து, இறுதியாக இம்மசோதாவை உரு வாக்கியிருக்கிறது” என்று தெரி வித்தார்.