tamilnadu

பொட்டாஷ் உரம் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

தஞ்சாவூர், டிச.14- டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் பெய்த மழையால், சம்பா, தாளடி பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்களைக் காப்பாற்ற பொட்டாஷ் உரம் அவசியம். ஆனால் பொட்டாஷ் தட்டுப்பாடு கடுமையாக உள்ளன. தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட் டத்தில் ஈடுபட உள்ளனர். ஒரு மூடை, ரூ.1,040 ரூபாய்க்கு விற்கப் பட்ட பொட்டாஷ், உரத் தட்டுப்பாட்டால் ரூ. 1,700-க்கு  வியாபாரிகள் விற்பனை செய்கின் றனர். இப்பிரச்னையில் ஒன்றிய அரசு தலை யிட்டு விலையைக் குறைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகும் விவசாயிகள், உரத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், வேறு வழி யின்றி தனியார் நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து உரங்களை வாங்குவதாக வும் கூறுகின்றனர். தனியார் நிறுவனங்கள் செயற்கை உரப் பற்றாக்குறையை உருவாக்குகின்றனர். அதி காரிகள் அதை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள் என விவசாயிகள் சங்கத் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங் களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை மற்றும் திருச்சிராப் பள்ளி மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிவடைந்து தாளடி நெற்பயிா் சாகுபடி தொடங்கியுள்ளது. அதற்கு முன்பாகவே சம்பா சாகுபடி தொடங்கி நடைபெற்று வரு கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் சுமார்  10 லட்சம் முதல் 13 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்று வருகிறது. சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்களின் விளைச்சல் அதிகரிக்க சாம்பல் சத்து உர மான பொட்டாஷ் மிகவும் அவசியமாகும். ஆனால், தமிழகம் முழுவதும் பொட்டாஷ் உரத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சம்பா பருவத்துக்கு தேவை யான பொட்டாஷ் உரத்தில் பாதியளவுக்குக் கூட கிடைக்காததுதான் தட்டுப்பாட்டுக்குக் காரணம் ஆகும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சா வூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் கோவை சுப்பிரமணியம், திருவாரூர் மாவட்டச் செய லாளர் கலியபெருமாள், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் துரைராஜ் ஆகியோர் டெல்டா மாவட்டங்களில் பொட்டாஷ் உரத் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தினர். ரூ.1,040-க்கு விற்ற உரம் ரூ.1,500 முதல் ரூ.1,700 வரை விற்கப்படு கிறது. அதுவும் கிடைக்கவில்லை என்பதை யும் உறுதிப்படுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் கோவை சுப்பிரமணியம் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்திலிருந்து உரம் வருகிறது, வருகிறது என்று கூறுகிறார்கள். லாரி அனுப்பியிருக்கி றோம் என்கிறார்கள்.செவ்வாய்க் கிழமைமாலை நான்கு மணி வரை உரம் வந்து சேரவில்லையென்றார். திருவாரூர் மாவட்டச் செயலாளர் கலியபெருமாள் கூறுகையில், பொட்டாஷ் மட்டுமல்ல, யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்களும்தட்டுப்பா டாகத்தான் உள்ளது என்றார்.

பொட்டாஷ் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் இந்தியாவில் இல்லை என்பதால் பெரும்பாலும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகி றது. இறக்குமதியின் அளவு குறைந்ததும், சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் பொட்டாஷ்தேவை அதி கரித்ததும் தான் தட்டுப்பாட்டுக் கும் விலை உயர்வுக்கும் காரணம் ஆகும்.பொட்டாஷ் விலை உயர்வைக் குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். பொட்டாஷ் விலையைக்குறைக்க வேண்டும். உரத்திற்கான மானியத்தை அதிகரிக்க வேண்டுமெனவும் விவசாயி கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் சி.சமய மூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளார். தமிழகத்தில் 18.5 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தேவையான உரங்கள், மாநி லத்தில் உள்ள 8,100 தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் 4,354 கூட்டுறவு விற்பனை மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விநியோகம் செய் யப்படுகிறது. உரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசால் ஒதுக்கீடு செய்யப்படு கிறது. இவை 15 உர நிறுவனங்கள் மூலம் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உரம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரி விக்கவும் அதனை நிவர்த்தி செய்யவும், மாவட்ட அளவில் வேளாண்மை இணை  இயக்குநர் அலுவலகத்தில் உரக் கண்கா ணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 91 93634 40360 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு வாய்மொழியாகவும் மற்றும் வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் தெரி வித்து பயன்பெறலாம் எனத் தெரி வித்துள்ளார். 

;