tamilnadu

img

செங்கொடி பேரணியால் சிவந்த நாகை

கோரிக்கைகளை முழக்கமிட்டு அணிவகுத்த விவசாயிகள்

மயிலாடுதுறை, செப்.17- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் பேரெழுச்சியுடன் சனியன்று துவங்கி யது.  மாநாட்டையொட்டி நாகை புத்தூர் ரவுண்டானாவில்  துவங்கிய பேரணியை  முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர்  வீ.மாரிமுத்து கொடியசைத்து துவக்கி வைத்தார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய  பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா, அகில இந்திய  தலைவர் அசோக் தாவ்லே,  அகில இந்திய துணை செயலா ளர் விஜூ கிருஷ்ணன், சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் பெ.சண்முகம், மாநிலத் தலைவர் வீ.சுப்ர மணியன், மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவரும்  கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி, சங்கத்தின் மாநில செயலாளர்கள் டில்லிபாபு(முன்னாள் எம்எல்ஏ) சாமி.நடராஜன், மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.        ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை யும், விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் பாது காக்க போராடிய செங்கொடி தலைவர்களின் படங்களை யும் கைகளில் ஏந்திக் கொண்டு கம்பீரமாக அணி வகுத்து வந்தனர். புத்தூர், மேலக்கோட்டை வாசல், பழைய பேருந்துநிலையம், குமரன்கோவில், எல்ஐசி வழியாக பொதுக்கூட்டம் நடைபெற்ற  தோழர்.கோ. வீரய்யன் நினைவு திடல்  (அவுரித்திடல் ) வந்தடைந்தனர்.

;