மதுரை,செப்.25- பாஜகவின் காவி ராணுவத்திற்கு வலுச் சேர்க்கத்தான் 3 புதிய குற்ற வியல் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது என்று மதுரையில் நடைபெற்ற கருத்த ரங்கில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு குற்றம்சாட்டி னார். ஒன்றிய பாஜக அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தம் மற்றும் மூன்று குற்றவியல் சட்டங்களைக் கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் மதுரையில் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் கம்யூனிட்டி ஹாலில் செவ்வாய்க்கிழமையன்று சிறப்புக் கருத்தரங்கம் நடை பெற்றது. கருத்தரங்கில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு உரை யாற்றியதாவது: சட்டத்தைப் பற்றி வழக்கறி ஞர்களும் நீதிமன்றங்களும் பார்த்துக் கொள்ளும் என ஒதுங்கிச்சென்ற நேரத்தில், இன்றைக்கு பொது மக்கள் அனைவரும் சட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ள, சட்டத்தைப் பற்றி பொது வெளியில் விவாதிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்த வர்கள் மோடியும் அமித்ஷாவும் தான். இன்று நாம் வாழக்கூடிய கால கட்டம் என்பது ‘புனிதமான’ காலம். இன்னும் நளினமாகச் சொல்ல வேண்டுமென்றால் புல்டோசர் ஜன நாயகம். ஒரு அரசாங்கத்திற்கு ஒரு வரைப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் இடத்தை, வீட்டை புல்டோ சர் மூலம் இடிக்கலாமா? என்கின்ற விசித்திரமான வழக்கு ஒரு மாநில உயர்நீதிமன்றத்தை தாண்டி உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலை மைக்கு தள்ளியிருப்பது மோடியும் அமித்ஷாவும்தான். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பொதுவெளியில் எந்த அமைப்புகளும் ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளக்கூடாது என்பது சட்ட மாகும். ஆர்எஸ்எஸ் ஆயுதம் ஏந்திய பயிற்சிக்கு தடைவிதிக்கும் இரண்டு சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. பாஜகவினர் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த இரண்டு சட்டங்களையும் வாபஸ் பெற்றனர். காவி ராணு வத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் சட்டங்கள்தான் இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள். நாகாலாந் தில் ராணுவத்தினர் பொதுமக்க ளைச் சுற்றி கொலை செய்தனர். ராணு வத்துக்கு எதிராக மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. இதன் மூலம் எந்த மாதிரியான குற்றவியல் நடைமுறை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே தான் இதுபோன்ற சட்டங்களை எதிர்ப்பதற்கு சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ விவாதிக்க வேண்டிய தேவையில்லை. மக்கள் மன்றத்தில் மக்களாகிய நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பாடம் புகட்ட வேண்டும். மகாராஷ்டிரா வில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்த லில் அந்த பாடத்தை மக்கள் புகட்டு வார்கள் என பேசினார். கருத்தரங்கிற்கு நலக்குழுவின் மாநிலத் துணைத் தலைவர் கே. அலாவுதீன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் அருட் தந்தை பெனடிக்ட் பர்ணபாஸ், ஏ. போணிபேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் என்.கணேசமூர்த்தி வரவேற்றுப் பேசினார். மாநிலப்பொதுச் செயலா ளர்
என்.ராமகிருஷ்ணன், மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, திண்டுக் கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி, மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் எஸ்.ஏ. லியாகத்அலி ஆகியோர் கருத்துரை யாற்றினர். உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு நிறைவுரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜான்சன் நன்றி கூறினார். மனிதநேய மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலை வர் சீனி அகமது ,பல் சமய உரை யாடல் குழு செயலர் அருட்தந்தை பால் பிரிட்டோ, சோக்கோ அறக் கட்டளை இணை இயக்குனர் வழக்கறிஞர் பி.செல்வகோமதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.பால சுப்பிரமணியன், மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் என்.ஜெயச்சந்திரன், ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் மண்டல செயலாளர் என்.பி.ரமேஷ்கண்ணன் ,ஓய்வூதிய சங்க மாவட்டச் செயலா ளர் சு.கிருஷ்ணன், உலமாக்கள் சபை மாவட்டச் செயலாளர் இமாம் முகமது இப்ராஹிம், ஜமாத் இஸ்லாமி ஹிந்த் மாவட்ட தலைவர் என்.பஷீர் அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அவ்தாகாதர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் உரையாற்றியதாவது: பாஜகவினர் சிறுபான்மையினரை பற்றி என்றைக்குமே கவலைப்படாதவர்கள். நாடாளுமன்றத்தில் 40-க்கும் மேற்பட்ட சட்டத்திருத்தங்களை முன்மொழிந்துள்ளனர். பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் தொடக்கத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை ஆதரித்தாலும் முடிவில் அனைவரும் எதிர்க்கின்றனர் .இந்த சட்டங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என அறிவித்திருக்கின்றனர். ஏதாவது செய்து நாட்டில் திசைத் திருப்பலை செய்யும் ஏற்பாடுதான் வக்பு வாரிய திருத்தச் சட்டம் என்று தெரிவித்தார்.