எடப்பாடி பழனிசாமி பேச்சு விரக்தியின் புலம்பல்!
விரக்தி காரணமாகவே, எடப்பாடி பழனிசாமி புலம்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியா ளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக தனது கூட்டணிக் கட்சிகளை அடிமைக்கட்சிகளாக நடந்திக் கொண்டிருக்கிறது என்றும்; திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கக் கூடிய கட்சிகள் எல்லாம் அடிமை சாச னம் எழுதிக் கொடுத்து விட்டதாகவும் விமர்சித்திருந்தார். மேலும், திமுக தனது கூட்டணிக் கட்சிகளை வளரவிடாது என்றும், திமுக வோடு கூட்டணி சேரும் கட்சிகள் எல் லாம் காற்றோடு காற்றாக கரைந்து விடும்; எனவே, அக்கட்சிகள் விழித் துக் கொள்ள வேண்டும் எனவும் கூறி யிருந்தார். இந்நிலையிலேயே, எடப்பாடி பழ னிசாமிக்கு பதிலளித்து, பெ. சண்முகம், தமது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திமுகவுடன் இணைந்து செயல்படும் கட்சிகள் கரைந்து போகும் என்று ஊடகங்களிடம் புலம்பியுள்ளார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி. அவருடைய பேச்சு, ‘யாரும் அணிசேர வரவில்லையே...’ என்ற விரக்தியின் வெளிப்பாடாகும்” என்று தெரிவித்துள்ளார்.
சிபிஎம் போராட்டம் கண்ணில் படவில்லையா?
“இந்தியாவிற்கும், தமிழ்நாட்டுக்கும் ஆபத்தாக எழுந்திருக்கும் பாஜகவின் நவ-பாசிச போக்குகளை எதிர் கொண்டு, மக்கள் நலனை காப்ப தற்காக சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் பரந்துபட்ட ஒற்றுமையை உருவாக்கு கின்றன. தமிழ்நாட்டில் அத்தகைய ஒற்றுமை நாட்டுக்கே முன் மாதிரியாக அமைந்துள்ளது. பாஜக எதிர்ப்பில் உறுதி காட்டிய படியே, கார்ப்பரேட் ஆதரவு பொருளா தார கொள்கைகளையும் எதிர்த்து நிற்கும் இடதுசாரிக் கொள்கைகளுக்கு புதிய வீச்சு உருவாகி இருப்பதை மது ரையில் நடந்து முடிந்த சிபிஐ(எம்) அகில இந்திய மாநாடு உலகிற்கே எடுத்துக் காட்டியது. எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் இது கண்ணில் படாமல் இருப் பது வியப்பாகத்தான் இருக்கிறது” என்று சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுக தொண்டர்களின் கவலையை உணருங்கள் “
அமித்ஷாவின் கைவிரல் அசை விற்கேற்ப ஆடும் பொம்மலாட்டமாக, அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள நிலைமை கண்டு, அக்கட்சி தொண்டர்கள் கவ லைப்படுவது அண்ணன் எடப்பாடிக்கு தெரியுமா?” என்று கேள்வியையும் பெ. சண்முகம் எழுப்பியுள்ளார்.